தெய்வத்தின் சீடர்கள் --6

கடந்த பதிவில் கிருஷ்ணன் தன் சீடரிடம் எப்படி சேர்கிறான் என்றும் அந்த சீடனை கொண்டு தனக்கு எப்படி கோவில் அமைத்து கொண்டான் என்று பார்த்தோம் ,இந்த பதிவில் முருக பெருமான் தன் சீடர்களை எப்படி ஆட்கொள்கிறான் என்ற தகவலை பார்ப்போம் ....

இந்த உலகில் எந்த செயலை நாம் செய்தாலும் பிரதிபலனை எதிர் பார்ப்போம் அல்லது பலன்கள் நமக்கு தரப்படும் இது வழக்கம் ,
ஆனால் ஆன்மிகத்தில் இவைகள் மாற்றி அமைய வேண்டும்,
பகுதி என்று வந்து விட்டால் எதையும் எதிர் பார்க்காமல் செய்யும் பக்கதர்களையே தெய்வம்களை விரும்பும் ,
மிக சிறந்த பக்தியின் அடையாளமே எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தெய்வம்களுக்கு செய்யப்படும் தொண்டுகள் தான் ....

சென்னையில் உள்ள சிந்தாதிரி பேட்டையில் மல்லையா தாஸ் பாகவதர் முருகனை பற்றி கோவில்களில் உபன்யாசம் செய்பவர் ,
அவர் கோவிலுக்கு செல்லும் பொழுது தனது மகன் கிருபானந்தனை தன்னுடன் அழைத்து செல்வார்,

தன்னுடைய 13 தாவது வயதில் கிருபானந்தர் வாழ்வில் நடந்த சம்பவம் , ஒரு நாள் கிருபானந்தர் சாலையில் நடந்து செல்லும் பொழுது காலில் கண்ணாடி கிழித்து ரத்தம் கொட்டியது,
கால்களை கிழித்த கண்ணாடியை அப்புற படுத்தி விட்டு ,மெதுவாக
மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காண்பித்த பொழுது ,
மருத்துவர் இதற்கு வைத்தியம் செய்ய ரூபாய் 30 வரை செலவாகும் என்று சொல்கிறார் ,
அந்த காலத்தில் ஒரு குடும்பம் நடத்த 30 ரூபாய் போதுமானது ,
கிருபானந்தர் சிந்தனை செய்தார் ,

காலில் சிறியதாக ஏற்பட்ட காயத்திற்கு செலவு செய்ய இத்தனை தொகை
கேட்கிறார்கள் என்றால் ,
அழகான ,முழுமையான ,அற்புதமான இந்த உடலை கொடுத்த முருகனுக்கு நான் எப்படிஎல்லாம் நன்றியுடன் கைமாறு செய்யவேண்டும் என்று சிந்தனை
செய்தவாறு மருத்துவரிடம் எனக்கு உடலை கொடுத்தவர் முருகன் இந்த காயத்திற்கு மருந்து கொடுப்பவர் முருகனப்பெருமானே நான் அவரிடம் முறையிட்டு கொள்கிறேன்
என்று அங்கிருந்து வெளியேறினார் .

முருக பெருமானுக்கு நன்றியுடன் சேவை செய்வது என்ற முடிவுடன் சிந்தாதிரி பேட்டையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று ஒரு மண்டலம் (48 நாட்கள் ) காலம்
அவரை வணங்கி வந்த பொழுது அவரின் கால்கள் முற்றிலும் குணமானதை அவர் கண்டார் ,

இதற்கு பின் இவர் 30 மேற்பட்ட முருகன் கோவில்களுக்கு தன்னுடைய பொருளால் கும்பாபிஷேகம் செய்தும் புதுப்பித்தும் வந்தார் கிருபானந்த வாரியார் சாமிகள்...

தெய்வம்களிடம் நாம் நம் தேவைகளை கேட்கிறோம் ,ஆனால் அந்த தெய்வம் கொடுத்த இந்த உடலுக்காக நாம் நன்றி சொல்வது இல்லை ,
முருகன் ஆட்கொண்ட பக்தர்கள் ஏராளம் உள்ளார்கள் ,

அகத்தியர் காலத்தில் இருந்தே உள்ளது என்று நூல்கள் படிக்கும் பொழுது நாம் அறியலாம் --அகத்தியர் முருக பக்தர் ,
திருமுருகுஆற்று படை கொடுத்த நக்கீரர்--முருக பக்தர்
கந்த சஷ்டி கொடுத்த பாலாதேவராயர் --முருக பக்தர் ,
ஷண்முக கவசம் பாடின பாம்பன் சாமிகள் --முருக பக்தர் ,
வண்ண சரபம் சாமிகள் --முருக பக்தர்
சுப்ரமணிய புஜண்டம் பாடின ஆதி சங்கரர் --முருக பக்தர் ,

இப்படி பலர் முருகனை குரு என்று வணங்கி பலரின் துயரங்களை நீக்கியவர் பல பேர் உண்டு

இப்படி உள்ளவர்கள் வரிசையில் சமீபத்தில் வந்தவர் வாரியார் சாமிகள் ,

இவருக்கு முன் பாம்பன் சாமிகள் முருகப்பெருமானின் தீவிர பக்தராக இருந்து ஷண்முக கவசத்தை பாடி பலரின் நோய்களை தீர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் வாழ்க்கையில் முருகனுடன் நடந்த பல சுவையான சம்பவம்கள் பல உண்டு ,

ஒரு நாள் இவரது நண்பர் அங்கமுத்து பிள்ளை இவரை காண வந்த பொழுது ,
சாமிகள் ஒரு பயணத்திற்கு ஏற்பாடு செய்த படி இருப்பதை கவனித்து ,
வெளியூர் பயணத்திற்கு தயாராகி கொண்டு இருக்கிறீர் போல தெரிகிறது
என்றதும்
சாமிகள் அவரிடம் நெடு நாட்களாக பழனி பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் ,
இன்று முருக பெருமான் என்னை அங்கு அழைத்து உள்ளார் என்றார் ,

நண்பர் நல்லது முருகனே அழைத்து உள்ளார் என்றால் மிகவும் மகிழ்ச்சி சென்று வாருங்கள் என்று விடை பெற்று கொண்டார் .

ஆனால் சாமிகளால் செல்ல முடிய வில்லை ,முருகனை சிந்தித்து பிராத்தனை செய்த பொழுது முருகன் நினைவில் தோன்றி ,
நான் அழைக்கும் வரை நீர் பழனி வர வேண்டாம் என்று கூறி மறைகிறார் ,

ஒரு ஆச்சிரியமாக தகவல் இது பாம்பன் சாமிகள் "பழனி முருகனை தரிசனம் செய்தது இல்லை" ..
அழைப்பு வந்தவுடன் பழனி செல்லலாம் என்று பழனியை தவிர்த்து மற்ற கோவில்கள் அனைத்தையும் தரிசனம் செய்து வந்தார் சாமிகள் .

ஒரு முறை காஞ்சிபுரத்தில் உள்ள சிவ கோட்டம் ,காம கோட்டம் கோவில்களை தரிசனம் செய்து விட்டு காஞ்சியை விட்டு கிளம்பலாம்
என்று முடிவு செய்த பொழுது ஒரு சிறுவன் அவரிடம் வந்து இங்கே உள்ள குமரக்கோட்டம் கோவிலை தரிசனம் செய்து விட்டீர்களா என்றதும் ,
இதுவரை நான் கேள்வி பட்டது இல்லை எங்கே உள்ளது என்ற சொன்ன சாமிகளை தன் கைகளால் பிடித்து குமரகோட்டத்திற்கு அழைத்து சென்ற சிறுவன் கருவறைக்குள் சென்று மறைகிறான் ....

தெய்வம்கள் குருவாக மாறினால் நம்மை ஆட்கொண்டு எதையும் எப்படியும்
செய்யும் என்பதை இவர் மூலம் உலகிற்கு புரிய வைத்த சம்பவம் இது ,

இது போல இவருக்கு உடலில் ஒரு தொல்லை உண்டான பொழுது
முருக பெருமான் தன் சீடருக்கு என்ன செய்தார் என்று அடுத்த பதிவில் காண்போம் .....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (17-Jul-16, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 477

மேலே