குலதெய்வம் வீட்டில் உள்ளதா இல்லை என்றால் என்ன செய்வது எப்படி வீட்டிற்கு வர அழைப்பது

கேள்வியும் பதிலும் --43 (நிறைவு பகுதி )

குலதெய்வத்தை பற்றிய ஆய்வில் கடந்த 2 பதிவுகளாக சில தகவல்களை பார்த்து வருகிறோம் ,
அன்பர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நான் அதில் பதில் பதிந்து இருந்தேன் ,

ஆனால் அன்பர்கள் மீண்டும் அதே கேள்விகளை கேட்டு உள்ளனர் ...
(குலதெய்வம் வீட்டில் உள்ளதா ?இல்லை என்றால் என்ன செய்வது ?
எப்படி வீட்டிற்கு வர அழைப்பது ?)

நம்முடைய சோதிட நூல்களில் தெய்வ நிமித்தம் என்ற நூல் உண்டு ,
இந்த நூலில் தேவதைகள் ,தெய்வம்கள் இவைகளுக்கு கட்டுபடும் மந்திரமும்
இதை வசிய படுத்த நாம் எந்த மந்திரம்களை சொல்லவேண்டும் என்ற தகவலும் தொகுப்பும் உள்ள நூல் ,

இது காலத்தால் சில மாற்றம் அடைந்து தேவ பிரசன்னம் என்று மருவி மலைநாட்டவரிடம் (மலையாள தேசம் ) இன்று அவர்களுக்கு கற்று தரப்படுகிறது .

ஒரு கோவில் பழுது அடைந்து விட்டால் அங்கே தெய்வம் /தேவதை உள்ளதா என்று பார்க்க இவர்கள் அழைத்து வரப்பட்டு பிரசன்னம் பார்ப்பார்கள் பக்தர்கள் ,
பிறகு அவைகளின் தேவைக்கு ஏற்ப கோவிலை திருத்தி அமைப்பார்கள்...

நண்பர் ஒருவர் சொன்ன தகவல் அவர்கள் ஊரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் உள்ளது ,
இந்த கோவிலின் உடைமைகள் (அம்பாளின் உடமைகள் ,கருப்பின் உடமைகள் )
இவர்கள் வீட்டில் தான் ஊரார் வைத்து இருப்பார்கள் ,கோவிலில் திருவிழா
காலம்களில் மேள தாளத்துடன் எல்லோரும் ஒன்று கூடி இவர்கள் வீட்டிற்கு வந்து அந்த பெட்டியை எடுத்து சென்று கோவிலின் திருவிழா முடிந்ததும் இவர்கள் வீட்டில் வைத்து விடுவார்கள் என்றார் .

பிரச்சனை என்னவென்றால் கோவில் உள்ள காவல் தெய்வமான காளி தேவியின் உத்தரவு திருவிழா நடத்த வரவில்லை என்ற காரணத்தினால்
தேவ நிமித்தம் பார்க்க மலை நாட்டிலிருந்து ஒரு பணிக்கரை அழைத்து வந்தார்கள் என்றும் ,

அவர் அமர்ந்து கணக்கிட்டு காளி தேவியை ஒரு மந்திரவாதி தீட்டு துணியால் மூடி மந்திரத்தால் கட்டி அழைத்து சென்று விட்டான் என்று தகவல் சொன்னதுடன்
அவள் திரும்ப இங்கே அழைத்து வரவேண்டும் என்றால் சில மந்திர கட்டுகளை அவிழ்து பலி பூசைகளை செய்து பிறகு ப்ரதிஷ்ட்டை செய்ய வேண்டும் என்றார் என்று சொன்னார் ...

பிறகு அவர்கள் அந்த பணிக்கர் சொன்ன முறைப்படி செய்து கோவில் திருவிழாவை சிறப்பாக செய்தனர் ,

இந்த சம்பவத்தை என் நான் இங்கே பதிகிறேன் என்றால் தீட்டு என்று ஒரு தகவல் தேவதைகளுக்கு ஆகாது என்று புரிந்து கொள்ளவேண்டும் ,

இந்த கலியுகத்தில் அவசர காலத்தில் இது எல்லாம் படிக்க சிந்திக்க சிரிப்பாக தான் வரும் ஆனால் சில சங்கடம்கள் அனுபவிக்கும் பொழுது தான் புரிந்து கொள்ள முடியும் ,

பெண்கள் தீட்டு காலத்தில் அடுப்பை கூட பற்ற வைக்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர் ,
சுத்தம் ,ஆரோக்கியம் ஒரு புறம் இருந்தாலும் வீட்டு தெய்வத்தின் ஆசிகள் இதில் அடங்கும் என்று உபசகர்கள் அறிவார்கள் .....

தீட்டு துணிகள் வீட்டில் இருந்து கொண்டே இருக்க கூடாது என்பது தான் இதன் பலன் ,
நம்மை அறியாமல் நம்மிடம் தொடரும் தீட்டு கழிக்கவே சில வழிபாடுகள்
விரதம் முறைகள் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்தனர் ,இன்று எல்லாம் மறைக்க பட்டது ,மாற்றப்பட்டது ....

நண்பர் ஒருவரின் சகோதரி குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம் ,

தான் கணவன் வெளியூர் பயணம் செய்த பொழுது விபத்தில் இறந்தவுடன்
தான் குல சாமி கருப்பின் மேல் கோபம் கொண்டு அவரின் கோவிலில் அவர் முன்னாள் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்,

இவரை போல குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வந்த
ஒரு குடும்பம் விபத்தில் மரணமாகி இறந்தார்கள் ,ஒரே ஒரு நபர் மட்டும்
இன்று உள்ளார் இவர்கள் குல தெய்வம் கருப்பு சாமி ,
கருப்பு சாமி வழிபாடு செய்யும் குடும்பத்தினர் பலர் இப்படி அகால மரணம் அடைவதையும் குடிக்கு அடிமைகளாக இருப்பதையும் நான் காண்கிறேன் ,

இது போல மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மருத்துவர்கள் ,சமையல் தொழில் செய்யும் நபர்கள் கருப்பு சாமியை வழிபடும் குடும்பத்தினர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது .

உயிர் பலிகள் குடும்பத்தில் ஏற்படுவதை நான் கவனித்த பொழுது சில ரகசிய தகவல்களை ஆசான் அகத்தியர் உணர்ந்து கொள்ள அருளினார் ....

கிராமிய தேவதைகள் என்ற நூலை ஆசான் மணியன் 1992-95 வரை ஒரு நூலாக வெளியிட்டார் ,இதில் பல கிராமத்தின் தெய்வம்களை பற்றி தெளிவாக இந்த மண்ணின் தேவதைகள் என்ற தலைப்பில் பதித்து
வெளியிட்டார்.

மலைநாட்டில் உண்டாக்கப்பட்ட பல தேவைதைகள் ஒரு பெட்டிக்குள் அடைக்க பட்டு ஆற்றில் விடப்பட்டது என்றும் அவைகள் கரை ஒதுங்கிய
பகுதியில் உள்ள மக்கள் கண்டு எடுத்து அவைகளுக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு பலிபூசைகள் செய்து வழிபடுகிறார்கள் என்று பதித்து இருந்தார் .

இப்படி மலை நாட்டில் இருந்து வந்த தேவதைகள் நம் குல தெய்வ கோவில் அடைக்க பட்டு அவர்களுக்கு ஒரு உணவும் வழங்கபட்டு தான் இந்த பரிவார தேவதைகளின் கூட்டம்.

ஒரு குடும்பம் வழிபாடு செய்ய குல சாமி கோவிலுக்கு செல்கிறது ,இவர்கள் சைவர்கள் சைவ படையல் வைத்து வழிபாடு செய்கிறார்கள் ,

இவர்களின் குடும்பத்தில் சில குழப்பம் கடுமையான சூழ்நிலை இவர் ஒரு சோதிடனிடம் அல்லது தேவதை உபாசனை செய்யும் நபரிடம் ஆலோசனை கேட்க செல்கிறார் ,
கேட்க்கும் பொழுது அவர் இவருக்கு தேவதைகளுக்கு பலி பூசைகள் போட்டால்
நன்மை என்று சொல்லி இவரை செய்ய சொல்கிறார் ,இது நாள் வரை பழக்கம் இல்லாத நபர் இவர் ,தற்பொழுது முதல் பலி பூசை ,
பிறகு வருடம் ஒரு முறை பலி பூசை என்ற கணக்கு வைத்து தொடரப்பட்டு
குல சாமிக்கு ஆகாமல் போய் இவரும் குடும்பமும் சீர்குலைந்து விட்டது ,

இது ஒரு புறம் மற்ற பார்வை என்பது குல தெய்வ கோவிலில் இவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது காமாட்சி தேவி என்று இவர்கள் முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள் ,
உடல் நிலை சுகவின்மை அல்லது காரிய தடை பிரச்சனைகளுக்கு இவர்கள் கோவிலில் உள்ள மற்ற தேவதைகளுக்கு அசைவ படையல் செய்வதாய் இவர்களே வேண்டி ,பிறகு வருடம் ஒரு முறை பலி பூசை போடுவதாக வேண்டிக்கொள்வார்கள் ....இப்படி தான் பல குழப்பம் குல சாமி கோவிலில் நடக்கும் ...

சரி ஏன் பலி பூசைகள்,யாருக்கு பலி பூசைகள் போய் சேரும் என்ற கேள்விக்கு ஒரே பதில் பேய்களுக்கு பிசாசுகளுக்கு இவைகளை கட்டி வைக்கும் தேவதைகளுக்கும் என்று மாந்த்ரீக நூல்கள் சொல்கிறது .

கருப்பு சாமி சைவம் ,முனி சைவம் ,அய்யனார் சைவம் ,மாரியம்மன் சைவம் இவர்களுக்கு என்று போடும் பலிபூசைகளை காற்றில் கலந்து உள்ள தேவதைகள் உண்பவர்களின் உடலில் இறங்கி உண்ணும் ...

இந்த தகவலை பற்றி 16 கவனகர் கனக சுப்பு ரத்தினம் அவர்கள் மிக தெளிவாக தன் உரையில் சொல்கிறார் ,
நாம் உண்ணும் உணவில் உள்ள ரசத்தை தேவதைகள் எடுத்து கொள்ளும் ,
இதை சோதனை செய்ய நீங்கள் வெட்ட வெளியில் அசைவம்/ சைவம் இரண்டையும் உண்டு பாருங்கள் ,
நாம் வீட்டில் எடுத்து கொள்ளும் அதே உணவு தான் கோவிலில் மிக சுவையாக இருக்க காரணம் தேவதைகள் உடலில் இறங்கி உண்ணுவதினால் தான் என்று புரியும் ,

குழுமாயி கோவிலின் எல்லையில் போடப்படும் பலிபூசைகளை அங்கே சமக்காவிட்டால் சுவை இருக்காது என்று அவர்கள் அங்கே சமைத்து உண்பார்கள் ,
சித்தர்கள் வழியில் பலிபூசைகள் ,மொட்டை அடித்தல் இரண்டும் நேர் எதிர்மறையான பலன்களை தரும் என்று அவர்கள் தங்கள் அடியார்களை
செய்ய அனுமதிப்பது இல்லை ...

சில உபாசகர்கள் உயிர் பலி பூசை நம் ஆயுளை வளர்க்கும் என்று மக்களுக்கு ஒரு புதிய தவறான கோணத்தை ஏற்படுத்தி உள்ளனர் ....

குலதெய்வம் ஒருவருக்கு ஆசிகள் தொடர்ந்து 60 வருடம் மட்டுமே தரும் ,பிறகு அடுத்த தலை முறைக்கு சென்று விடும் ,
இதை ரிஷிகள் வழிப்படி சஷ்டி பூர்த்தி என்றும் திதி என்றும் சில ஹோமங்களை செய்து வீட்டில் குல சாமிகளை அழைப்பார்கள் ,

தமிழர்கள் முன்னோர்வழிபாடு செய்தும் சைவ படையல் வீட்டில் செய்தும் குல தெய்வத்தை வழிபாடு செய்து வீட்டில் குல சாமிகளை அழைப்பார்கள்

நிறைவாக நாம் வீட்டை சுத்தமாக வைப்பது ,ரிஷிகள் ,சித்தர்கள் ,கூற்று படி தூபம் ,தீபம் ,ஏற்றி வழிபாடு செய்வது வெள்ளி என்று கற்கண்டினால் பொங்கல் செய்து தேன்சேர்த்த பாலை படைத்து வழிபட எந்த குலதேவியாக இருந்தாலும் வீட்டிற்கு வரும் .

குலதெய்வம் தெரியாதவர்கள் காமாட்சி அம்மனை வழிபாடு செய்தால் அவளின் ஆசியால் குல தெய்வம் உங்களுக்கு தெரியப்படும் .....

நாடி பார்த்து அறியலாம், பெரியசாமி அழைத்து உபாசகர்கள் மூலம் அறியலாம் ....

நன்றி

கும்பை சித்தர்
காக்கை சித்தர் ஆசைகளுடன் .......

தகவல் நிறைவானதாக இருக்கும் என்று நம்புகிறேன் ,
உங்களின் குழப்பம் தெளிந்து நிறைவான குல தேவியின் ஆசிகளை அடைய வாழ்த்துக்கள் ...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (17-Jul-16, 11:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 22900

மேலே