நம் மாதத்தில் பெரிய நாள்

உன்னைச் செய்யும் இடைஞ்சலுக்கும்
அங்கங்கு நீ பார்வை முறித்து
பதிலாய்ச் சொல்வதற்கும்
நேற்றைய ஞாயிறு தான்
ஒரு பெரிய காரணம்
அப்படி இல்லையென்றாலும்
உண்மையில் அது
போதாச் சிறு விடுமுறையாக இருக்கிறது.

இழுத்த படி நீயும்
இருத்தியபடி நானும்
முன் பின்னாக
கதவின் பிடியோடிருக்க
அசைவுறும் நிலையிடைப் பிளவின் வழி
நயமாய் வரும் காற்று
நாம் போட்டி போடும்
அன்பை வாங்கி போயிருக்கும்.

நம்மில் ஒருவருக்கு மட்டும் கிடைத்த
இத்திங்கள் விடுமுறை அனுமதி
இருவருக்கும்
சரிக்கு சரி ஆனது பற்றி
காதலிடம் கைக்கட்டி நிற்பதென்பது
ஒரு முத்தத்தில் துவங்குகிறது
ஒரு முத்தத்தில் முடிகிறது

எப்படியோ
மாதத்தில் ஒரு ஞாயிறையாவது
கூட இழுத்து கொள்ளும் திங்களும்
ஒரு திங்களையாவது
பெற்றுக்கொள்ளும் சிறு ஞாயிறும் தான்
மொத்தத்தில் நமக்கு பெரிதாக இருக்கிறது

- முருகன்.சுந்தரபாண்டியன்

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (18-Jul-16, 2:19 pm)
பார்வை : 54

மேலே