கை வலிக்க எழுதினால்

கை வலிக்க எழுதினால்
மனம் வலி குறைகிறது.

மனம் துடிக்க நேர்ந்தால்
இதய வலி அதிகமாகிறது.

இதயம் இயக்க மறுத்தால்
உயிர் பலியாகிறது.


உயிர் பிரிந்தால்
ஏதும் யாதும் எதுவும்
அறியாது.

குமுறல்கள் குறுகி விடும்.
உண்மை மரித்துப் போகும்
உடல் மணணோடு புதையும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (18-Jul-16, 10:20 pm)
பார்வை : 819

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே