சாதனைப் பெண்கள்

சாதனைப்_பெண்கள்

சாதிக்க பிறந்தவரே பெண்கள் தரணிக்கே
போதிக்க பிறந்தவரே பெண்கள்

நீதிக்கு தலைவணங்கும் பெண்கள் முறைக்கும்
அநீதியின் வாலைவெட்டும் பெண்கள்

சிகரம் தொட்டிடுவர் பெண்கள் சிரிப்பினை
லகரத்தில் கொட்டிடுவர் பெண்கள்

தகரத்தை தங்கமாக்கும் பெண்கள் வாழ்க்கையில்
அகரமாய் பலபேர்க்கு பெண்கள்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 7:17 am)
பார்வை : 4670

மேலே