பிரிவெனும்_கொடுமை

பிரிவெனும்_கொடுமை

பிரிவெனும் கொடுமை இதயத்தைக் கிழிக்கும்
ஆழ்மனம் புகுந்து தீராரணம் கொடுக்கும்
துயரில் கண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுக்கும்
தூக்கத்தை கொன்றுவிட்டு ஏக்க விதைவிதைக்கும்

சிரித்த நற்தருணங்கள் சிந்தைக்குள் வந்துவிழும்
அணைத்த நற்பொழுதுகள் ஆனந்தக்கண்ணீர் தரும்
நனைந்த மழைத்துளிகள் நித்தம்நித்தம் நனைக்கவைக்கும்
பேசிய வார்த்தைகளெல்லாம் செவியிலாடி கனக்கவைக்கும்

கிடைத்த வேலைக்காக தொலைதூரம் சென்றவனின்
அடுத்த வருகைக்காய் வாசலிலே காத்திருக்கும்
எடுத்த காரியங்கள் எதுவும் முடியாமல்
நடக்குமிந்த நாடகம் தினமும் தொடர்ந்திடுமே..

பசியும் பசியாது புசித்தால் நிறையாது
இதயம் அழுதிருக்கும் உதயம்வரை தொடரும்
எதையும் தாங்கும்மனம் பிரிவொன்றைத் தாங்காது
புதையும் நினைவுகளில் விழிதிறந்தே உறங்கிவிடும்

கொடுமை மிகக்கொடுமை பிரிவு கொடுங்கொடுமை
பெரிய பெட்டிசெய்து அன்பை அதிலேவைத்து
பெரிய பூட்டுபோட்டு நன்றாய் பூட்டிவைப்போம்
சாவியைத் தொலைத்துவிட்டு பிரியாமல் இணைந்திருப்போம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 7:20 am)
பார்வை : 114

மேலே