அன்பினால்
அன்பினால்
பிறக்கும் அடுத்தநொடி அன்பைக் கற்றுக்கொண்டோம்
வாழும் நொடிகளெல்லாம் அன்பை விட்டுச்சென்றோம்
அன்பு மாத்திரமே உலகை ஆண்டிடட்டும்
அன்பில்லா மாக்களினம் நரகம் பார்த்திடட்டும்
படைத்தவன் தன்பிரதியாய் அன்பை படைத்துவைத்தான்
செடியில் அன்புவுண்டு கொடியில் அன்புவுண்டு
இருக்கும் உயிர்களிடம் அன்பு நிரம்பவுண்டு
அறிவு கொண்டுநாமும் அன்பை செலுத்தாவிட்டால்
படைத்த இறைவன் நம்பக்கம் வந்திடானே..
விடத்தை ஏற்றிக்கொண்டு பாம்பாய் அலைகின்றோம்
தடத்தை மறந்துவிட்டு தவறாய் பிழைக்கின்றோம்
மெத்தப் படித்திட்டாலும் அன்பே பெரும்படிப்பு
சிந்தை மயங்கிவிட்டால் வாழ்வே இருட்டடிப்பு
அன்பு இருக்கும்மட்டும் உலகம் ஜெயித்துநிற்கும்
அன்பை இழந்துவிட்டால் கலகம் மட்டும்வாழும்
அன்பே நற்பண்பு அன்பே நல்லறிவு
அன்பே தேவையிங்கு அன்பினால் வாழ்வுயிங்கு...