காகித ஓடம்

காகித_ஓடம்

காகித ஓடம் சிறிது தூரமே ஓடினாலும்
பெரிய மகிழ்ச்சி கொடுக்கும் சிறார்க்கு..
காகித ஓடம் தண்ணீர் போகும் போக்கில் போகும்
இடையில் கற்கள் ஏதும் வந்தால்
ஒதுங்கிச் செல்லும்.. இல்லை முட்டி நில்லும்..
நீரின் வேகம் அதிகமாக‌
காகித ஓடம் தண்ணீருக்குள் தஞ்சம் புகும்..
காகித ஓடம் போலவே வாழ்க்கை..
சிறு மழையென இன்பம் வந்தால் மகிழ்ச்சி..
பெரு மழையென துன்பம் வந்தால் துக்கம்..
எதிர்த்து நின்றால் லட்சியம் எட்டலாம்..
பூமியை மேளமாக்கி தாளம் கொட்டலாம்..
அதற்கு முன்பு வரை அதன் பெயர்..
ஒரு சாதாரண உபயோகமில்லாக் காகிதம்..
ஒரு உரு கிடைத்தவுடன் அதன் பெயர்
காகித ஓடம் அல்லது காகிதக் கப்பல்..
உலகம் தெரியா குழந்தையாய் பிறப்பெடுத்தோம்
உலகத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்
பிறகு
உலகத்துக்கு நம்மை தெரியப் படுத்துவோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 7:15 am)
Tanglish : kaakitha odam
பார்வை : 232

மேலே