கட்டிக்கலாமே

நான் இறந்துவிட்டால்
யார் வந்து சொல்வார்
என் அன்பை உன்னிடத்தில்
கட்டிக்கிட்டது ஒருத்தன
வச்சிகிட்டது இன்னொருத்தன
சாய போறன் நாலு பேரு தோளுல
மனசுல அப்பயும்
இப்பயும்
எப்பயும்
சுமக்கறது உன் ஒருத்தன தான்டா
புரியலையா
கட்டிகிட்டன் உன்ன.
வயித்ல வச்சிகிட்டன் நம்ம உசுர
கடைசியா என்ன தூக்கப்போற
அந்த நாலு பேரு
இப்பலாம்
எங்க தூக்கிட்டு போறாங்க.
வண்டி தான் தூக்கிட்டு போது
அப்ப உன் மடியிலயே என்ன போட்டுக்கோ மாமா
மாமா
நான் கட்டிகிட்டதும் ஒருத்தனையே
மனசுல வச்சிகிட்டதும்
ஒருத்தனையே
அந்த ஒருத்தனுக்கு தான்
நான் முந்தி விரிச்சன்
நான் கட்டைல
போற வரைக்கும்
அந்த ஒருத்தன் கைய தான் பிடிப்பன்
அவனுக்கு எது பிடிக்குமோ
அது தான்
எனக்கும் பிடிக்கும்
அவனுக்கு எது
சுகமோ
அது தான்
எனக்கும் சுகம்
அவன் இல்லாமல்
இவள் உலகில் எதுவும் இல்லை
இவள் உலகமே இல்லை
இவளே இல்லை
அந்த அவன்
இப்ப என்ன
கட்டிக்கலாமே
~ பிரபாவதி வீரமுத்து