அழகிய தமிழ் மகளே

முல்லை மலர் ஆயிரம்
மலர்ந்து மணம் வீச;
மயில் மான் ஆட
முயல் துள்ளி விளையாட
செவ்வானம் நடுவே வந்த
சுவர்ணக் கிளியே!!
-----------------------------------------
மங்கையா மாணிக்கமா
வார்ப்பும் வைரமாகுதடி
விழிப் பார்வையில்!!
சிகரத்தில் சிறகடிக்குதடி
நெஞ்சம், உன்னை
நோக்கும் நொடிகளில்!
-----------------------------------------
பார்ப்போர் பறைசாற்றும்
பண்பு, பக்கத்தில்
வந்தால் அன்பு!
கலங்கும் கண்ணீரை
துடைக்கும் குணம்
கருனைக் காரிகையடி நீ!!
-----------------------------------------
தென்றல் வீசும்
சாரலிலே கூந்தல்
வாசம் வையத்து
உயிர்களைய வசிகரிக்குதடி!
வார்த்தை குயிலா கேட்கையில்
நான் நானக இல்லையடி!
-----------------------------------------
உதடுகள் ரோஜா
இதழோ ,முத்தம்
மூற்கனையும் முட்டால் ஆக்குதடி!
உன் அங்கம் தங்கமா
ஒளிப் பட்டதும்
இன்பம் மலராய் பூக்குதடி!!
--------------------------------------------------
காதல் சொல்லுக்குள்லே எனை
காவியமாய் வடித்தவளே!!
தாவனித் தாரகையே
தன்நலமில்லா தமிழச்சியே!
பெண் உனைபோல் பார்க்க
சென்மம் நூறு போததாதடி!!

எழுதியவர் : காமேஷ் (19-Jul-16, 10:33 pm)
பார்வை : 313

மேலே