தகுதியற்றவன்

தகுதியற்றவன்

மனப்பாடம் செய்து
மதிப்பெண் வாங்க தெரியவில்லை

ஆசியர்களை
அனுசரித்துப்போக தெரியவில்லை

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசத்தெரியவில்லை

மந்தையில் ஒரு ஆடாக
ஒடவும் தெரியவில்லை

தன் தவறுகளுக்கு
மற்றவர்கள்மீது குற்றம்சாட்ட தெரியவில்லை

கெட்ட வார்த்தைகள் பேசி
பிறருக்கு கெடுதல் செய்யத் தெரியவில்லை

பழிக்குப் பழிவாங்க தெரியாது
மன்னித்து விடுகிறாய்

ஏளனம் பேசி
எள்ளி நகையாடத் தெரியவில்லை

பொய்பேச மறுக்கிறாய்
சாதி சமயம் சார்ந்து
இருக்கவும் மறுக்கிறாய்

நீதி நேர்மை அன்பு மரியாதை..
பற்றியெல்லாம் பேசுகிறாய்

எனவே
நீ தகுதியற்றவன்
ஒரு மாணவனாக இருப்பதற்கு.

எழுதியவர் : சூரியகாந்தி (20-Jul-16, 7:19 pm)
Tanglish : thaguthiyatravan
பார்வை : 253

மேலே