அழகே உருவான அழகின் பெட்டகம் ------ போட்டிக் கவிதை
பேசாத சிலைகளுக்கு
மௌனமே அழகு !!
பேசும் சிலைகளுக்கு
புன்னகையே அழகு!.
உளிகளால் வடிக்கப் படும்
சிலைகளுக்கு அழகு
வடிவம் !
கடவுள் வடித்த
சிலைகளுக்கு அழகு
அத்தனையும் !
எத்தனை சிற்பிகள்
ஒன்றிணைந்தாலும்
இந்த சிலைகளின்
அழகிற்கு ஈடாகுமா????????????
படபடக்கும் கண்கள் !!
உதட்டைக் கடிக்கும்
முத்துப் பற்கள் !!
குலுங்கிச் சிணுங்கும்
கைவளைகள் !!
நெளிந்து வளையும்
இஞ்சி இடைகள்!!
இடைகளைக் கடந்து
நீண்டு தொங்கும்
நீல் முகிலை ஒத்த
கருங்கூந்தல் !!
வெட்கத்தால் சிவந்து
குனிந்த அழகிய முகம் !!
வெட்கம் தீர மண்ணில்
கோலமிடும்
கால் விரல்கள்!!
இராமனின் கோதண்ட
வில்லிற்கு போட்டியிடும்
விற்புருவங்கள் !!
குயிலின் குரலுக்கு
போட்டியிடும்
இனிய குரலோசை !!
இன்னும்
எத்தனை
எத்தனை
இத்தனையும்
அடங்கிய அழகின்
பெட்டகம் !!!
நம் நாட்டு அழகு
தேவதைகள்!!!
சிற்பிகள் தோற்றுப்
போகும் செதுக்க
முடியா சிற்பங்கள்
நாங்கள் !!