செயலாற்ற முடியாத செயலர் பான் கி மூன்


ஐ. நா. மன்றத்தின் பொதுச் செயலர் இவர்
செயல்படாத செயலருக்கு இரண்டாம் வாய்ப்பு

எதிர்ப்பு போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் எதிர்த்து இருப்பேன்

இலங்கைக் கொலைகாரனை இன்றுவரை
எதுவுமே செய்யாதச் செயலர் இவர்

தட்டிக் கேட்க அதிகாரம் இருந்தும்
தட்டிக் கேட்க தயங்குபவர் இவர்

அமெரிக்காவின் கைப் பாவையாக ஐ .நா .மன்றம்
ஐ நா மன்றத்தின் கைப் பாவையாக பான் கி மூன்

உலகின் மிகப் பெரிய பதவியில் இருக்கும்
உலகின் மிகச் சிறிய நபர் இவர்

இலங்கைக்கு எதிராக உலகமே குரல் தந்தும்
இன்று வரை உருப்படியாக எதுவும் செய்யாதவர்

முதல் முறையில் முத்திரைப் பதிக்காதவருக்கு
இரண்டாம் முறை வாய்ப்பு வழங்கியது தவறு

உலகமகாக் கொலைகாரன் ராஜபட்ஜேவை
உடனடியாகத் தூக்கிலிடு அல்லது பதவி விலகிடு

செயலாற்ற முடியாத செயலர் செயலராய் இருக்கும்
செயலற்ற ஐ. நா. மன்றத்தை இழுத்து மூடுங்கள்

எழுதியவர் : இரா .இரவி (24-Jun-11, 6:48 pm)
பார்வை : 300

மேலே