காச்சல், காச்சல் இங்க வாடிச் செல்லம்

காச்சல், காச்சல் இங்க வாடிச் செல்லம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

யார பாட்டி காச்சல், காச்சல்னு கொஞ்சிக் கொஞ்சி கூச்சல் போடறீங்க?
@@@@@@

நா யாரடி தங்கம் கூப்படப்போறென். எம் பேத்தியைத் தாங் கூப்படறேன்.
@@@@@@@


பாட்டிம்மா உங்க பேத்தி பேரு காச்சல் இல்ல. அவ பேரு காஜல்.
@@@

எனக்கு என்னடி தங்கம் தெரியும்? நா பட்டிக்காட்லெ பொறந்து வளந்தவ. அவளோட அப்பன், அம்மாளுக்கே அவ பேருக்கு என்ன

அர்த்தம்னு தெரியாதாம். என்னால அந்தப் பேர சரியாச் சொல்லமுடில.
@@@@

சரி பாட்டிம்மா. உங்களால அவ பேரச் சரியாச் சொல்லமுடில்லன்னா நீஙக உங்களுக்குப் பிடிச்ச நல்லா பேரா வச்சு அவளக்

கூப்புடுங்க. நா எஙக பக்கத்து வீட்ல இருக்கற இந்தி ஆசிரியர்கிட்டே அவளோட பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டென். அவுரு

சொன்னாரு காஜல்-ன்னா “கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை சாயக் கலவை”ன்னு அர்த்தமாம்.
@@@@
@@@@@@@@@@@@@@@

அடியோ ஆத்தாடி. கண்ணுல உள்ள முடிக்குப் போடறதக்கூடவா பேரா வச்சுக்கறாங்க. நல்லாருக்குதடி தங்கம். இனி பொட்டு, மஞ்சள், மை, கொலுசு, வளையல், காப்பு, மூக்குத்தி, ஒட்டியாணம், மோதரம்ன்னெல்லாடங்கூடப் பேருவச்சுட்டா நல்லா இருக்கும்டி.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்.காம், விக்கீபிடியா, யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ KAJAL (काजल)
@@@@@@@@@@@@@@@@@@@@

Name Kaajal generally means Mascara or Surma or Eyeliner, is of Indian origin, Name Kaajal is a Feminine (or Girl) name.

Mascara; Surma; Eye liner
mascara
maˈskɑːrə/
noun
1. a cosmetic for darkening and thickening the eyelashes.
"waterproof mascara
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. பிற மொழிப்பெயர் அறிய.

எழுதியவர் : மலர் (22-Jul-16, 10:18 pm)
பார்வை : 284

மேலே