அழகிய தமிழ் மகள்

வெட்டி வைத்த வானவில்லாய் உன் புருவம்
படபடவென படபடக்கும் மின்னாலாய் மினுமினுக்கும் அவள் கண்கள்
ரோஜாவைப் போல பன்னீர் பொழியும் அவள் இதழ்
கோர்த்து வைத்த முத்துக்கள் தான் அவளின் பால் வண்ண பற்கள்
சின்னதொரு புன்னகையோ ஆண்களை தள்ளாட செய்யும் ஊஞ்சள்
இரவில் மலரும் தாமரையாய் அவள் முகம் மயக்கும்
தேன் கனிச்சுவையாய் செவியோரம் முத்தமிடும் அவள் பேச்சு
தேய்பிறை வெண்நிலவாய் வளைந்தது அவள் கொடி இடையே
நடையிலும் நளினம் உன்டு மனதிலும் வீரமாய் விளங்குவது எங்கள் அழகிய தமிழ் மகளே!

எழுதியவர் : Aravind (23-Jul-16, 12:48 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 183

மேலே