அவள் விரல் தந்த முத்தங்கள்

பெண்ணே
உன் பி(ப) ஞ்சு விரல்
முந்திக்கொண்டு வளர்ந்த
நகம் நான்!

உன்
செவ்விய தேன் இதழ் முத்தங்கள்
காயுமுன்னே சிதறிக்கிடக்கின்றேன் கீழே
பொறாமைக் கொண்ட
உன் பற்களால்!

கீழே விழுந்தாலும் புல்லாகி பாலாகி
கவிக்குள் சென்று எழுதுகோல் பிடிப்பேனே
என் இரண்டு விரலால் முத்தம் மழையென
கவிதை பொழிந்தாலும் உன் அழகு தீர்ந்திடுமா ?
அதற்குள் என் விரல்கள் என்ன ஓய்ந்திடுமா ???

எழுதியவர் : மருதுபாண்டியன். க (23-Jul-16, 6:52 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 116

மேலே