பெண்ணே -நீ

பெண்ணே - நீ
புரியாத பதிரோ...?
இல்லை,
புன்னகை மலரோ...?
பெண்ணே - நீ
தெவிட்டாத இசையோ..?
இல்லை,
தென்றல் காற்றோ...?
பெண்ணே - நீ
வாடாத மலரோ...?
இல்லை,
ஓயாத நதியோ...?
பெண்ணே - நீ
புதுமைக் காவியமோ...?
இல்லை,
பொய்யான கவிதையோ...?
பெண்ணே - நீ
அன்பின் வடிவமோ...?
இல்லை,
அழகின் சிகரமோ...?
பெண்ணே - நீ
சிரிப்பின் அழகோ...?
இல்லை,
அழகின் பிறப்போ...?
விடை தெரியாமல் - நான்
வியக்கிறேன் பெண்ணே - நீ
எதுவென்று...?
ஆனால்,
அன்பே...
என் மனம் சொன்னது
இவையனைத்தும் கலந்த
பெண்மை இவள் என்று...!

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (23-Jul-16, 7:33 pm)
பார்வை : 856

மேலே