தமிழ் மகளின் கொள்ளையர்கள்
எழுத்துக்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னவளுக்காக கவிதையில் பாட.
அவளழகை எழுத்துக்களால் சூட.
அலைகின்றேன் நாளெல்லாம் தேட.
கண்ணதாசன், வாலி - இரு
கொள்ளையர்கள்
கொள்ளையடித்துவிட்டதால் - என் கண்ணுக்குக்
கொள்ளையழகு பெண்ணவளைக்
கவிதயில் பாடிட,
கற்பனையில் எழுத்துக்களை
கண்டுபிடிக்கத் தேடுகின்றேன்.
கிடைக்கவில்லை - என்றாலும்
கண்ணழகி, கட்டழகி, காதலியவள்
கலங்கவில்லை.-என்னை
கவலைக் கொள்ள வைக்கவில்லை.
ஏன் தெரியுமா? - அவள் சொன்னாள்
என்னவனே - நீ தானே என் உயிர்மெய்
எழுத்து. - இதற்கு
எதற்கு கவிதையில் என்னை
ஏற்ற தவிக்கின்றாய் என்றாள்.
என்றாலும் - அவளை
என்றுமே அழகு தமிழில்
எடுப்பாய் அலங்கரிக்க
எழுத்துக்களை தேடிக் கொண்டிருக்கின்றேன்.
எழுத்துக்களைத்தான் காணவில்லை.