சீர்பெற்றேன் நானும் சிறந்து - நேரிசை வெண்பாக்கள் 7

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னவளே;
கார்கூந்தல் பெற்றவளே! கண்ணே! கனியமுதே
சீர்பெற்றேன் நானும் சிறந்து! 1

உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே!
காரோட்டும் அந்தக் கவின்,நிலவைக் காணுங்கால்
போராட்டம் தான்,என்னுள் போ! - 2

உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே!
போராட்டம் போக்கிடு! பொற்றாலி கட்டுவேன்
தேரோட்டம் தானினிமேல் தேர்! – 3

இரண்டாம், மூன்றாம் வெண்பாவின் ஈற்றடிகள் இரண்டும் திரு.எசேக்கியல் அளித்தது.

தேரோட்டம் இன்றுதான் காண் - பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்

உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே
பௌர்ணமியைப் பார்த்தது போல பரவசமே..
போராட்டம் போதுமே போ! 1

உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே
பௌர்ணமியைப் பார்த்தது போல பரவசமே..
தேரோட்டம் இன்றுதான் காண்! 2

‘இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்’ - அ வேளாங்கண்ணியின் நகைச் சுவைப் பகுதியிலிருந்து!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-16, 9:43 pm)
பார்வை : 115

மேலே