ஏனென்றால்
கவிதைகள் கிறுக்கியதில்லை உன் கண்கள் காணும் வரை;
தேன் ஒழுகும் பூக்கள் கண்டதில்லை உன் இதழ்கள் பார்க்கும் வரை;
குயிலுக்கு செவிகொடுத்தவன் நானில்லை உன் குரல் கேட்கும் வரை;
கருமையை சிறிதும் ரசித்ததில்லை கார்கூந்தல் காணும் வரை;
அன்னம் கண்டு சொக்கியதில்லை உன் நடை காணும் வரை;
மல்லிக்கொடி கண்டு மயங்கியதில்லை உன் இடை காணும் வரை;
பிக்காஸோ பரிட்சயமில்லை உன் நிழல் காணும் வரை;
ராஜாவை சற்றும் வியந்ததில்லை உன் வளையோசை கேட்கும் வரை;
ஏனென்றால் காரணம் நீயானாய், உன்னாலே காதலன் நானானேன் !!!!!!!!!!!!!!