காதல் கரையும் நிமிடங்கள் ...!!!
![](https://eluthu.com/images/loading.gif)
அறிமுகம் இல்லாத ஊருக்கு
நீண்ட தூர பயணமோ
கண்கள் இரண்டும் சோர்வடைந்து
தூக்கம் வரும் வரை படிக்க
வாழ்வியல் புத்தகங்களோ
இதுவரை பழக்கம் இல்லாத
தொலைக்காட்சி நெடுந்தொடரோ
நாள் முழுதும் ஜன்னலில் அமர்ந்து
எதிரில் கட்டப்படும் அடுக்குமாடியில்
மேஸ்திரி செங்கற்களை அடுக்கி பூசும் லாவகத்தையோ
இனி உடுத்த வேண்டாமென மூட்டைகட்டிய
பழைய உடைகளை மீண்டும் உபயோகிக்கலாமா என
புரட்டி பார்த்து கொண்டிருப்பதோ
அம்மா அப்பாவின் திருமணமோ
சிறு குழந்தையாய் இருக்கையில்
செய்த சேட்டைகளை
அம்மாவிடம்கூறச்சொல்லி
மீண்டும் கேட்டு கொண்டிருப்பதோ
என
ஏதேனும் ஒன்றை
நீ இல்லாத சோகங்களை மறக்க
அவசியமாய் தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன்
நித்தம் நித்தம்
உன் கனமான நேரங்களில்
என்னுடன் நீ உரையாட விரும்பிய போதெல்லாம்
என் உலகம் மறந்து உன் உணர்வுகளோடு பயணித்தவன்
இன்று மூன்றாம் மனிதனாய்
உன் முன் நான்
நீயோ
என் வீதியையும் ,அலுவலக சாலையையும்
சலனமற்ற நதியாய் உன் வாகனத்தில்
கடந்து போகிறாய்
உன் சாலையில் கிடக்கும்
சிறு கல்லாய் நான்
வலிக்கிறதடி ராட்சஷி........!!!!