காதலை தேடி-8

காதலை(லே) தேடி-8

வெற்று தாளுக்கும்
கரு மை எழுத்திற்குமான
இடைவெளியாய் நீள்கிறது
எங்கள் காதல் பயணம்.......
அவளின் நினைவுகளே
வண்ணம் தருகிறது
கேட்பாரற்று கிடக்கும்
என் காதல் இதயத்திற்கு.....

எனக்கு பிடித்த அடர் பச்சை நிறத்தில் தேவதையாய் அலங்கரிக்கப்பட்டு என் எதிர்ப்புறமாய் அமர்த்தப்பட்டாள்...அவள் முகத்தில் கல்யாண கலைக்கான எந்த அடையாளமும் தென்படவில்லை...வழக்கமான மெலிதான புன்னகை படர்ந்த முகம், அவளது கண்கள் எதையோ குழப்பத்தோடு தேடிக்கொண்டே இருந்தது காற்றின் திசையில்....எப்படியோ திருமணம் உறுதி செய்தபின் சாப்பிட அனைவரையும் உளமார அழைத்த பெண் வீட்டார் என்னை அதை விட மரியாதையும் அன்பும் கலந்த கலவையில் அழைத்து விட்டு சென்றனர்......

எனக்கு என்னவோ சாப்பாட்டிலெல்லாம் பிடிமானம் செல்லாமல் என் எண்ணமெல்லாம் அவள் மனதை படிக்க எண்ணியே சுற்றி கொண்டிருந்தது.....எல்லாரும் சாப்பிட சென்ற பின்னும் நான் அங்கேயே இருப்பதை பார்த்த சகியின் சித்தி மீண்டும் ஒருமுறை என்னை சாப்பிட வரும்படி வற்புறுத்தினார்......

"நான் சகிகிட்ட கொஞ்சம் பேசணும்,ஒரு பத்து நிமிஷம் தான், ப்ளீஸ்" என்று வேண்டும் தொனியில் கேட்க......

கல்யாணம் முடிஞ்சதும் பேசிட்டே தான இருக்க போறிங்க, இப்போ வந்து சாப்பிடுங்க........அப்புறம் பேசிக்கலாம் என்று புன்னகைத்தபடியே கிண்டல் செய்தார்......

"இல்ல இப்போவே பேசணும், ப்ளீஸ்" என்று மறுமுறை நான் கெஞ்சவும், சரி நீங்க மாடிக்கு போங்க நான் அவளை கூட்டிட்டு வரேன் என்று யோசனையோடு சென்றுவிட்டார்......

"சகி மாப்ள உன்கிட்ட ஏதோ பேசணுமாம், போய் பேசிட்டு வந்துடு"

"பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சு, இப்போ பேச ஒன்னும் இல்ல, நான் போகல சித்தி.....நீங்களே போய் சொல்லிடுங்க......"

"என்னமா உனக்கு ஆச்சு, முகத்துல ஒரு சுரத்தும் இல்லாம பேசிட்டு இருக்க.......உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா, இல்ல அம்மா, அப்பா சொன்னாங்கனு சரினு சொல்றயா????"

"அய்யோ சித்தி ப்ளீஸ் ஆரம்பிச்சிடாதீங்க, இப்போ என்ன நான் அவர்கிட்ட போய் பேசணும் அவ்ளோ தானே, சரி நான் போய் பேசறேன்....."

ரூமின் கதவிற்கு வந்து ஞாபகம் வந்தவளாய் சித்தி அவர் எங்க இருக்காரு?

"மாடில தான்மா இருக்காரு, அப்புறம் ஒரு விஷயம்.....மாப்ள இன்னும் சாப்பிடல சீக்கிரம் பேசிட்டு அவரை சாப்பிட கூட்டிட்டு வந்துடு, அது மட்டும் இல்லாம நீங்க ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கறத யாராவது பாத்தா ஏதாவது பிரச்சனையை கிளப்பி விட்ருவாங்க"

"ம்ம் சரி....." என்று தலையை ஆட்டிவிட்டு மாடிக்கு வந்தாள்......

அவளை வர சொல்லிவிட்டேனே தவிர அவளிடம் என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது, எதுவும் புரியாமல் சாலையில் வளர்ந்திருந்த வேப்ப மரத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தேன்.....

"மரத்த வேடிக்கை பார்க்க நான் கூட இருக்கணும்னா வர சொன்னிங்க?" அவள் குரலில் சிறிது கடுப்பும், எரிச்சலும்,பொறுமையின்மையும் கலந்திருந்தது....

இதற்கு மேலும் பொறுமை காத்தால் போனை கட் செய்தது போல பேச்சையும் கட் செய்துவிட்டு போய்விடுவாள் என்று மூளை எச்சரிக்க என் மௌனத்தை கைவிட்டுவிட்டு வார்த்தைகளை வளைக்க ஆரம்பித்தேன்........

"உனக்கு என்ன பிடிக்கலையா?"நேரடி தாக்குதலில் இறங்கினேன்.....

"உங்களை பிடிக்காம கல்யாணத்திற்கு சம்மதிக்கற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல......."

"அப்புறம் ஏன் உன் முகத்துல எந்த சந்தோஷமும் இல்ல, முகத்துல என்ன வார்த்தைல கூட சந்தோசம் இல்லையே"

"அப்படிலாம் ஒன்னும் இல்ல" பட்டும் படாமலும் பதில் வந்தது.......

"சரி அப்படினா இந்த கல்யாணத்துல உனக்கு மனப்பூர்வமான விருப்பம் தான்னு சத்தியம் பண்ணி சொல்லு"

"சத்தியம்லாம் எதுக்கு" சிறிது தடுமாறி பின் ஏதோ மன குழப்பத்தில் ஆழ்ந்தாள்.....

"ஏண்டி, ஏன் இப்படி என்ன படுத்தற உனக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னா தானே தெரியும்..எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, அதுக்காக உனக்கு விருப்பமில்லாம கல்யாணம் பண்ணிக்க விரும்பல....ஒருவேளை நீ யாரையாவது காதலிக்கறயா, அப்படி இருந்தா கூட சொல்லு...நானே எதையாவது சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்தறேன்" எமோஷனலாக நான் பேசவும்...

"ப்ளீஸ் அப்படிலாம் எதுவும் செஞ்சு வச்சிடாதீங்க, இப்போ என்ன, இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமா இல்லையானு தெரியணும் அவ்ளோ தானே, விருப்பம் தான்...போதுமா, தெரிஞ்சிகிட்டீங்களா........."

"போதாது, உன் மனசுல என்ன இருக்கு அதை சொல்லு....."

இப்போதைக்கு என் மனசுல நல்லபடியா இந்த கல்யாணம் நடக்கணும்னு மட்டும் தான் இருக்கு.......

"எனக்கு நம்பிக்கை இல்ல, ஏதோ ஒரு விஷயத்தை உன் மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க, அது என்னனு சொல்லுமா, உன் குழப்பத்தை பத்தி யோசிச்சி யோசிச்சே நான் குழம்பிட்டு இருக்கேன்........"

ஒரு நிமிடம் உற்று பார்த்தவள் பரிதாபமாக பதிலுக்கு காத்திருந்த என் முகத்தை பார்த்து சட்டென சிரித்தாள்.......

"நான் நல்லா தான் இருக்கேன், ஏற்கனவே சொல்லிருக்கேன் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எனக்கு இல்லனு, சோ கல்யாண பயம், கல்யாணத்துக்கு பின்னாடி வாழ போற வாழ்க்கைனு கொஞ்சம் குழப்பம்......பெருசா வேற எதுவுமில்லை........என்ன பத்தி யோசிச்சு நீங்க குழப்பிக்காதீங்க...........அப்புறம் எதையாவது யோசிச்சு கல்யாணத்த நிறுத்தற எண்ணம் இருந்தா இப்போவே அந்த எண்ணத்தை இடம் தெரியாம அழிச்சிட்டு மன நிம்மதியோடு போங்க.....நான் தான் உங்க மனைவி, நீங்க தான் என் கணவன்.....இது தான் நமக்கு விதிக்கப்பட்டது, மாத்த முடியாது.......இத நான் புரிஞ்சி ஏத்துக்கிட்டேன்..........சரி இப்போ உங்க குழப்பம் தீர்ந்ததா, கீழ போலாமா" என்று என்னை திருப்திப்படுத்த முயன்ற அவள் வார்த்தைகளில் தேரியவனாய் கீழே சென்றேன்.........

அவளுக்கு தான் பிரச்சனை என்று அன்று நான் நினைத்த அந்த முட்டாள்தனம் தான் இன்று என்னை இப்படி அலைக்கழிக்கிறது........என் வாழ்வை காக்க வந்தவளின் வாழ்க்கையை நிர்கதியாய் நிறுத்த காரணமே என் பிரச்சனை தானே........இந்த நிமிடமும் மனதால் அவளிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டே தான் இருக்கிறேன், நேரில் மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைக்குமா? அது தெரியாமலே என் பயணம் நீடிக்கிறது...

பயணம் தொடரும்......

எழுதியவர் : இந்திராணி (26-Jul-16, 1:25 pm)
பார்வை : 421

மேலே