கலாம் எனும் உயிர் எழுத்து
அன்பை வளர்க் கலாம்
ஆர்வத்தை பெருக் கலாம்
இன்பத்தைக் கொடுக் கலாம்
ஈடுபாட்டோடு உழைக் கலாம்
உண்மையைச் சுவைக் கலாம்
ஊக்கத்தை விதைக் கலாம்
எளிமையாய் இருக் கலாம்
ஏற்றத்தை உருவாக் கலாம்
ஐயத்தைப் போக் கலாம்
ஒற்றுமையாய் இருக் கலாம்
ஓய்வின்றி ஓடியவர் கலாம்
ஒளடதமாய் இருக்க முயற்சிக் கலாம்
என்று இந்தியா முழுவதிலும்
அனைவரது இதயங்களிலும்
இடம் பெற்றவர் - நமது
மேதகு அப்துல் கலாம்
அன்னாரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை
அமைதியாய் எழுந்து நின்று
மெளன அஞ்சலி செய்திடலாம்!
இந்தியர்களின் உள்ளங்களில்
உயிர் எழுத்தாய் இருப்பவர்...
கலாம்... கலாம்...கலாம்!
அவரைப் போல் நாமும் கனவு காணலாம்!
பின் குறிப்பு!
விரைவில் " விஞ்ஞான விடிவெள்ளி அப்துல் கலாம்" என்ற புத்தகத்தை வெளியீடு செய்ய முயன்று கொண்டு இருக்கிறேன்.