நீத்தா, நீத்தா
நீத்தா, நீத்தா
###
என்ன பாட்டிம்மா, நீத்தா, நீத்தா-ன்னு சொல்லறீங்க?
###
வாடி தங்கம். எம் பேத்தி நீத்தா-வதாங் கூப்படறேன்.
##
நீத்தா-வா, யாரு அது?
##
அடியே எங் கடசி மவன் முருகனோட பொண்ணுடி.
####
பாட்டி உங்க மகன் முருகன நா எனக்குத் தெரியும். அவரு என்னவிட ரண்டு வயசு சின்னவரு. அவர நாங் கடைசியா அவரோட கல்யாணத்திலெ பாத்தது. அதுக்கப்பறந்தான் அவுரு அவரோட மனைவியை அழைச்சிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டாரே.
####
ஆமாண்டி தங்கம். வெளிநாடு போன அவன் அஞ்சு வருசம் கழிச்சி நேத்துத்தா நம்ம ஊருக்கு வந்தான். எம் பேத்தி நீத்தா மூணு வருசத்துக்கு முன்னாடியெ பொறந்துட்டா. நாந்தா ரண்டு வருசத்துக்கு மேல எங் கடசி மக ஊட்டுல சேலத்துலே இருந்துட்டு போன மாசந்தா இங்கெ வந்தன்.
@@@@
அதெல்லாம் எனக்குத் தெரியும் பாட்டிம்மா. ஆனா உங்க பேத்தி பேருக்கு என்ன அர்த்தம்னு தெரில பாட்டிம்மா.
#####
அட அது என்ன அர்த்தமோ இருந்துட்டுப் போகுது. எம் பேத்தி ரொம்ப அழகா இருக்காறடி தங்கம்.
#####
சரி பாட்டிம்மா, அவ வருட்டும் நானும் அவளப் பாக்க ஆசையா இருக்கறென்.
########
Nita: Hebrew ஹீப்ரு அர்த்தம் : Grace. (அழகு இந்தியில்: Moral, நீதி, படிப்பினை, போதனை, நனமை, தீமைக் கொள்கை சார்ந்த, faithful. நம்பத் தகுந்த, Native American ( a member of any of the indigenous peoples of North and South America and the Caribbean Islands). பூர்விக அமெரிக்கர்களின் மொழிகளில் : Bear. கரடி ஸ்பானிஷ் மொழியில் Spanish : God's gift of grace. இறைவனின் அருள் கொடை
नीता
Hebrew Names, Indian Names, Native American Names, Nicknames or Pet Names, Persian Names, Spanish Names
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: விக்கிபீடியா & தநேம்ஸ்மீனிங்காம்
#####################################################
சிரிக்க அல்ல. சிந்திக்க. பிற மொழிப பெயரின் பொருள் அறிய.