நான் தானே நிலா உனக்கு
நிலவே
அவள் முகம் கண்டு
மயங்கி மூர்ச்சை ஆகி விடாதே
நாளை பௌர்ணமி ...
ஏனடி புருவம் உயர்த்துகிறாய்
நாளை பௌர்ணமி இல்லை என்று
சந்தேகம் கொள்கிறாயா?
உன் முகம் கண்டு
இந்த அமாவாசையும்
பௌர்ணமி ஆனது போதாதோ ...
சற்று பொருத்திடு
அலுவலகத்திலிருந்து
உனை கண்டுமயங்கிட வந்து விடுவேன்
நிலவாக...
நான் தானே
நீ
எட்டி பிடிக்கும் நிலா உனக்கு!!!