பாரத நாட்டில் பரமனும் நிற்க வேண்டும் குற்றக் கூண்டில் பல விகற்ப இன்னிசை வெண்பா

பாரத நாட்டில் பரமனும் நிற்க வேண்டும் குற்றக் கூண்டில் ..

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

சக்தியைத் தூக்கி ஒருநாள் பரமனும்
பக்தியில் ஆடிய போதுடல் துண்டுகளாய்
வீழ்ந்திடத் தோன்றின பூமியில் சக்தியின்
பீடங்கள் ஐம்பத்தொன் று

இல்லற வாழ்வினில் எல்லைகள் இல்லாமல்
தொல்லை தருபவன் ஆண்டவன் ஆயினும்
பெண்கள் கொடுமை தடுப்புச்சட் டத்தின்கீழ்
பெற்றுக் கொடுதண் டனை

தகதிமி தகதிமி தாளத்தில் தாண்டவ
மாடிய பாதங்கள் தேடிப் பழியை
சுமத்தி சிவன்மேல் நிறுத்துவீ ராநீதி
தேவன்முன் னில்விரை வில்

சக்திபீடம் சென்றங் குநாளும் தொழுகின்ற
பக்தர் அனைவரும் ஒன்றாய் திரண்டு
வருவீரா யின்ஆல முண்டதிரு நீலகண்
டன்நிற்பான் குற்றக்கூண் டில்

எழுதியவர் : (29-Jul-16, 3:15 pm)
பார்வை : 42

மேலே