நீ என்றும் தேயா நிலவாவாய் காதலியே

உன் முகத்தில் ஒரு நாள் புன் சிரிப்பு

மறு நாள் சலனமில்லா வெறுமை

உன்னைப் புரியவில்லையே பிரிய சகி

நீ அந்த நிலவா என்ன

முழு நிலவாய் தேய் பிறையாய்

மாறி மாறி வந்து மனதைக் கலக்க

தேயாத முழுநிலவாய் என் மனதில்

என்றும் நிலைத்திடுவாய்

என்னை நிலைதடுமாற வைத்திடாமல் ,

இதற்காக காமனுக்கு நான் தூது சொல்லவா

இல்லை பெரும் வேள்வி மூட்டவா


கோபம் கொள்ளாதே என் முழு நிலவே

நீ முள்ளில்லா ரோஸாவை மாறிவிடு

என் வாழ்வில் வசந்தத்தின் தென்றலாய்

மாறிவிடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jul-16, 2:49 pm)
பார்வை : 95

மேலே