அழகிய பெண்ணே

தெளிவான வகிடெடுத்து
பின்னிய கூந்தலுடன்
தலைநிறைய பூச்சூடி
முழுநிலா திலகமிட்டு
தெள்ளிய பார்வைக்கொண்டு
விண்மீன் தோடுமிட்டு
புன்னகைத்த உதடுகளுடன்
தென்றலென தவழ்ந்துவரும்
தமிழ் மகளே நீ அழகு.!


கையசைவினால் தென்றல் செய்து
காலை கதிரவனை முகத்தில்கொண்டு
கருணை பொங்கும் விழியோடு
முந்தானையை சொருகிக்கொண்டு
கால்கொலுசு இசைமீட்ட
எறும்புக்கு இரையாக மாக்கோலம் தானுமிட
கைவளை தாளமிட நிலைமைகளை தான்வணங்கி
கோலமிடும் அழகோவியமே
என் தமிழ்மகளே நீ அழகு..!

தரணியில் நடந்துவரும் தாவணி மலரே
பட்டாடை உடையுடுத்தி-மலரேந்தி
தெய்வத்தை தரிசிக்கும் தேவதையே
குங்குமப்பொட்டிட்ட குலவிளக்கே
மலரினும் மெல்லிய மனம்கொண்ட மகளே
ஆயிரம் பாவனைகள் முகத்தினில் காட்டி
சிறு அசைவிலும் இனிமைக்கூட்டி
அழகுக்கு அழகுசேர்க்கும்
தமிழ்மகளே நீ அழகு.!

வான்மகளை வரவேற்க
மழைச்சாரலில் முகம் நனைத்து
மழைத்துளி கையிலேந்தி
அழகுமுகம் அதில் நனைத்து
நீரிலுள்ள தாமரை போல்
நிலம்தனில் நடமாடி
மின்னலென புன்னகைத்து
விழிமீன்களை நீந்தவிடும்
தமிழ்மக்களே நீ அழகு..!

பெண்மையின் பண்பறிந்து தன்குலம் காக்கவேண்டி
பெண்மையின் இலக்கணத்துடன் நிலைமைகளை தான்பார்த்து
நித்தம் நற்பண்புகளை தாயிடம் தான்பயின்று
வீரமும் பெருமையும் தந்தையிடம் பெற்றுக்கொண்டு
தன்கனவை தகர்த்தெறிந்து பிறந்தவீடு பெருமை சேர்க்க
யாரென அறியாத இன்னொரு குடும்பத்திற்கு
மருமகளாக அறிமுகமாகி பெற்றவர்தான் ஆசியுடன்
புகுந்த வீட்டை கட்டிக்காக்கும் என் குலவிளக்கே
தமிழ்மக்களே நீ அழகு .!

எழுதியவர் : சிவா விஜய் (30-Jul-16, 2:02 pm)
Tanglish : alakiya penne
பார்வை : 967

மேலே