கனவே கலையாதே
கனவே கலையாதே
எந்தன் கனவே கலையாதே .....
விழிமூடியதும் நீ வந்தாய்
விடியும்வரை நீ தங்கிடுவாய்
விந்தைகள்பல புரிந்திடுவாய்
கனவே கலையாதே
எந்தன் கனவே கலையாதே .....
கன்னி உன்னைக் காத்திடுவேன்
கனவில் வந்தவளும் நீதானே
காலமும் துணை நான்தானே
மறுத்திடும் மனமும் உனக்குண்டா
பொறுத்திடும் உள்ளம் எனக்கில்லை..
அதரம்வரை வந்ததே உன் சம்மதமும்
உதிரத்தில் ஊடுருது உந்தன் உயிரும்
கனவே கலையாதே
எந்தன் கனவே கலையாதே .....
நிலையாக நீயும் வந்திடு கனவில்
கலையாக கற்போம் பலநூறு ....
அசைத்திடு விரைவாய் பதிலென
இசைத்திடு உன்திருவாய் கீதமென ...
நாணமும் தடுக்குதோ நாணல் உனக்கு
கானமும் பாடுதோ காதல் உள்ளமது ..
மொழிந்திடு மழையாய் பொழிந்திடு
வழிகிறதே உன்காதல் அருவியாய்
வழிமொழிகிறேன் நீ முன்மொழிவதை
பொன்மொழியாய் நம் செம்மொழியில்
கனவே கலையாதே
எந்தன் கனவே கலையாதே .....
பழனி குமார்