உடன்பிறப்பு

உன்போல் நானில்லை....
அனால்
உன்னால் ஆனவன் நான்....

உடன் பிறந்தவனை
போட்டியாக,
சுமையாக என்னும்
இப்பிரபஞ்சத்தில்...
நீ மட்டும் தோழனாக
தெரிந்தாய்...

நடை பையில்ந்தேன்
தவழும் வயதில்
உன்கரம் பிடித்தே....

இவ்வுலகத்தின் மீது
நான் கொண்ட பயம்
காணாமல் போனது
உந்தன் காலடி தடத்தை தொடர்ந்து
வந்தேன்...

மெழுகாய் உந்தன்
ஆசையை உருக்கி,
என்னை
ஒளியாய் ஒளிரவைத்து
நீ காண உலகை
என்னை காணவைத்தாய்....

நான் போகும் பாதையில்
என் தன்னம்பிக்கையாய்
நீ இருக்க
சரித்திரம் சாத்தியமாகும்....

ஏது புண்ணியம் செய்தேனோ
உன் தம்பியாய் நான் பிறக்க..

என் அன்பு அண்ணன்(ஸ்ரீதரன் ஜெயச்சந்திரன்)
உன்போல் நானில்லை....
அனால்
உன்னால் ஆனவன் நான்....

எழுதியவர் : (30-Jul-16, 3:29 pm)
பார்வை : 3305

மேலே