பகலில் ஒரு முழுமதி

அன்று ஒரு நாள்
காலைச் சூரியன் என் முகம் தழுவ
கடலின் அலைகள் என் பாதம் உரச
நடந்து கொண்டிருந்தேன் கடற்கரை ஓரமாக
எங்கிருந்தோ வந்து
என் நெஞ்சில் மோதியது ஓர் பூச்செண்டு
குனிந்து நோக்கிய என் விழிகள் விரிந்தன வியப்பால்
பகலில் ஒரு முழுமதியை கண்டால் வியப்பு சாத்தியம் தானே!

எழுதியவர் : துவாரகா (30-Jul-16, 10:36 pm)
பார்வை : 446

மேலே