மிக நீண்டதோர் பயணத்திற்காய் …

நாளை வரும் சூரியோதயத்துக்காய்
காத்திருக்கும் மொட்டுக்கள் இங்கே .

நேற்றும் இன்றும் தொலைத்த, தொலைக்கின்ற
கணங்கள் எல்லாம் மரணித்ததாய் இருக்க -
நாளைக் கணங்கள் தம்மை திருத்தி
எழுதுவதற்காய் காத்திருக்கும்
மொட்டுக்கள் இவை.

தெரிந்தோ தெரியாமலோ தவற விடட
கணங்களும் கை விடட கனவுகளும் -
நாளைக்கு என்ற நல்ல சிந்தனையோடு
காத்திருக்கின்றன இந்த மொட்டுக்கள் இங்கே .

இது வரை தொலைக்கப் பட்ட பூக்கள் காணுமே -
இனியும் வேண்டாமே .
இடையிலே கொய்வதற்கு நாம் யாரிங்கு ?

கேள்விகள் இவை - கேட்கப் பட்டு,
கேட்கப் பட்டு – விடைகள் தொங்கி நிற்கும்
எக் காலமும் .
பதில்களுக்காய் மொட்டுகள் காத்திருக்கும்.-
தங்கள் மிக நீண்டதோர் பயணத்திற்காய் .

எழுதியவர் : செல்வி விசாகுலன் (31-Jul-16, 5:19 pm)
பார்வை : 85

மேலே