Chelvi Visakulan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Chelvi Visakulan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 10 |
வானம் கானங்கள் இசைத்திட - அங்கு
தாள நகர்வுகள் கொண்டிட்ட
நகர்கின்ற உயிர்ப்பூக்கள் எல்லாம்
சுவாசிக்கும் - சுவாசம் ஒவ்வொன்றிலும்
சிறு கதைகள் - முற்றுப் புள்ளிகள் இன்றியே
இது தான் பூமிப் பந்து.
வானம் பொழியும் மும் மாரி
அது தானும் நின்று பார்க்கும்
தளராத மனம் கொண்டு - மீண்டும்
சேர்த்து ஒரு நாள் சீறி அழும், விழும்
பூமி மீட்டு பார்க்கும் - தன வீடு தன்னை
கூரையிட்டு காக்கும் முடிந்தால்.
எல்லாம் கண்டு கொள்ளும்
சீறும் , சினக்கும் , வியப்பு கொள்ளும்,
ஆறு அது கொள்ளாத துயரம் கொள்ளும்.
எத்தனை தாங்கும் பூமிப் பந்திங்கு
எனினும் இறுமாப்புடன் நின்று கொள்ளும்
தன் நிலைகள்
நடக்கின்றேன் - பாதங்கள்
வலிகள் கண்ட போதும்
நடக்கின்றேன்.
தேடுதல்கள் தொலைவு
என்ற போதும் நடக்கின்றேன்.
வாழ்வு தட்டிக் கொடுத்த போதும்
நடக்கின்றேன்.
வரம் வாங்க என்றல்ல -
வாகை சூட என்றல்ல -
நான் நிலவு காண வேண்டும்.
சுற்றுகின்ற பூமி காணும் - நான்
நிற்க வேண்டும் ஒரு முறையேனும்
நிலவினால் என் பாதம் நிற்க வேண்டும்
சற்று இளைப்பு காண வேண்டும்
என் நிலவு கொள்ள வேண்டும்
தண்மை நான் கொள்ள வேண்டும்.
எப்போதும் தேடுகின்ற நிலவு
என் வீடு ஆக வேண்டும்
ஆதலால் நடக்கின்றேன்
நிலவு தூரம் இல்லை எனக்கு.
பூக்கள் தூவி நின்ற
சாலைகள் - சற்றே சிலிர்த்து நிற்கும்.
தேக்கம் இன்றியே.
மனங்கள் அங்கலாய்க்கும்,
அவை துளிர்க்கும்
காரணங்கள் இன்றியே,
தானே மகிழ்வாக ...
தொலைவு கண்டிட்ட
மனம் மட்டும் அங்கு
தனிமைப் படும்,
ஏங்கி நிற்கும் - தனிமையால்.
தானே மகிழ்வாக.......
மீண்டும் சேரும் அங்கு.
பாய்கின்ற நீரோடை கலக்கும்.
வாய் மொழி கண்டு
மகிழ்வுறும் - மீண்டும்
ஒரு தென்றல் வீசிடும்.
தானே மகிழ்வாக ...
சொல்லாமல் மனது சிரிக்கும்
அது மகிழ்வுறும் - எல்லாமே மகிழ்வாய்
இருந்திடும் - திருப்திகள்
கொண்டிடும்.
தென்றல் முகர்ந்திடும்.
ஆனாலும் கடையுறு மானிடம்
கருத்து மறந்திடும் எப்போ
சின்ன மொட்டு விரிய
முன்னமே அங்கு -
சொன்ன சேதிகள்
செவிகள் கொள்ளாது
சென்றன -
மொட்டுகள் இன்னமும் ..
கனவாகிய நினைவினில் ...
தன்னை தூக்கம் கொள்ளாது,
உறவு முகம் காணாது,
சொல்லி மறைந்த சூரியன் இவன் -
இன்னமும் கனவாகிய நினைவினில்.
நேற்று வரை இருந்த கனவுகள்
கலைந்த நிலையில் - இன்று
மறந்து, நாளைக்கென்று ஒரு கனவுடன்..
இன்னமும் கனவாகிய நினைவினில்..
வார்த்தை கொள்ளவில்லை அங்கே -
வளமுறு தோற்றம் தெரியவில்லை.
நீட்டி நெடுக முழங்க ஒன்றும்
இல்லாத நிலையில் அங்கே
இன்னமும் கனவாகிய நினைவினில்..
நிஜங்களின் அழுத்தங்கள்
நிஜமாக அழுத்தவே - சுகமாய்த்
தெரிந்தது – இன்னமும்,
இன்னமும்
நினைவுகள் சுற்றி சுற்றியே
நிகழ்காலம் தொனிக்கச் செய்ய -
சின்னதாய் மனக்கதவு தட்டுதே -
சிறு சல சலக்கும் மனப்பயங்கள் -
தோன்றும் கணங்கள் எல்லாம்
தேவைக்கு அதிகமாய் தோற்றுகிறதே
ஏனிந்த பயங்கள் - புரியவில்லை
எனினும் - யாரோ ஒருவர்
சொல்லிட்டு போகும் கதைகள் எல்லாம்
அடிமனது சென்று ஆர்ப்பரித்துக்
கிளர்ந்திடும் விளைவுகள் தான் இவை
புரிகிறதா -
சொல்பவர் சொல்லட்டும்
உனக்கென்ன கேடா இங்கு
உன் நிலை மாறாது நடை போட்டிடின்
யார் உன்னை அசைப்பார்
யார் உன்னை தொடர்வர்
தொடர்பவர் எல்லாம் தொடர்பவரிடம் தான்
மனசு கண்டறியும் மாதவனே
உன் நிலை கண்டிட்டார்
ஊரிங்கு - விரல் ஆட்டம்
காட்டிடார் உன் முன்னே
நீய
அண்டை நாகரிகம்
என்னும் மாய
திரை படத்தின்
"கதாநாயகர்களின்
ஒருவன் நான்"
அப்பன் ஆத்தாவை
சுமையென நினைத்து
அண்டை நாகரிகத்துக்கு
பலிகொடுத்த
"மாமனிதர்களின்
ஒருவன் நான்"
உடன் பிறந்தவர்களை
மறந்து மாய கன்னிகளுடன்
பறந்து திரிந்த
"காதல் மன்னர்களுள்
ஒருவன் நான்"
தன்னை தொலைத்துக்கொண்டு
வந்த அப்பாவி அவளை
திருமணம்
என்னும் பெயரில்
என் ஆசைக்கும்
மோகத்துக்கும்
அடிமையாக்கிய
"உத்தமர்களின்
ஒருவன் நான்"
தான் தொடங்கிய
ஆதியில் அவனையும்
கொண்டுவிட்டு
பெருமிதம் கொண்ட
"நல்ல தகப்பன்களில்
ஒருவன் நான்"
என் அப்பன் ஆத்தாவை
தொலைத்த அதே இடத்தில்
இன்று நானும் தொ