பூமி என்னும் பூப்பந்து

வானம் கானங்கள் இசைத்திட - அங்கு
தாள நகர்வுகள் கொண்டிட்ட
நகர்கின்ற உயிர்ப்பூக்கள் எல்லாம்
சுவாசிக்கும் - சுவாசம் ஒவ்வொன்றிலும்
சிறு கதைகள் - முற்றுப் புள்ளிகள் இன்றியே
இது தான் பூமிப் பந்து.

வானம் பொழியும் மும் மாரி
அது தானும் நின்று பார்க்கும்
தளராத மனம் கொண்டு - மீண்டும்
சேர்த்து ஒரு நாள் சீறி அழும், விழும்

பூமி மீட்டு பார்க்கும் - தன வீடு தன்னை
கூரையிட்டு காக்கும் முடிந்தால்.
எல்லாம் கண்டு கொள்ளும்
சீறும் , சினக்கும் , வியப்பு கொள்ளும்,
ஆறு அது கொள்ளாத துயரம் கொள்ளும்.

எத்தனை தாங்கும் பூமிப் பந்திங்கு
எனினும் இறுமாப்புடன் நின்று கொள்ளும்
தன் நிலைகள் மாறாமலே
ஏன் என்று கேட்பீர் இங்கு,
வான விதானம் பூமி எனும்
பூமிப் பந்திற்கு மட்டிலே .
ஆதலால் பூமி பந்து
தானும் வீறு நடை கொள்ளும்
இறுதி மூச்சு வரை.

சொல்கின்ற சேதி கூட நாளை
சிதைந்திடும் அங்கே
பூமி மறந்திடும் காலங்களூடே
அது நகரும் –
வானம் என்ற அணைப்பின் ஊடே.
சிறுகதைகள் மீண்டும் நகரும்,
முற்றுப் புள்ளிகள் இல்லாமலே.

எழுதியவர் : செல்வி விசாகுலன் (22-Jan-19, 11:03 am)
சேர்த்தது : Chelvi Visakulan
பார்வை : 69

மேலே