நிலவு தூரம் இல்லை

நடக்கின்றேன் - பாதங்கள்
வலிகள் கண்ட போதும்
நடக்கின்றேன்.
தேடுதல்கள் தொலைவு
என்ற போதும் நடக்கின்றேன்.

வாழ்வு தட்டிக் கொடுத்த போதும்
நடக்கின்றேன்.
வரம் வாங்க என்றல்ல -
வாகை சூட என்றல்ல -
நான் நிலவு காண வேண்டும்.

சுற்றுகின்ற பூமி காணும் - நான்
நிற்க வேண்டும் ஒரு முறையேனும்
நிலவினால் என் பாதம் நிற்க வேண்டும்
சற்று இளைப்பு காண வேண்டும்

என் நிலவு கொள்ள வேண்டும்
தண்மை நான் கொள்ள வேண்டும்.
எப்போதும் தேடுகின்ற நிலவு
என் வீடு ஆக வேண்டும்

ஆதலால் நடக்கின்றேன்
நிலவு தூரம் இல்லை எனக்கு.

எழுதியவர் : செல்வி விசாகுலன் (22-Jan-19, 11:01 am)
சேர்த்தது : Chelvi Visakulan
பார்வை : 216

மேலே