தானே மகிழ்வாக

பூக்கள் தூவி நின்ற
சாலைகள் - சற்றே சிலிர்த்து நிற்கும்.
தேக்கம் இன்றியே.
மனங்கள் அங்கலாய்க்கும்,
அவை துளிர்க்கும்
காரணங்கள் இன்றியே,
தானே மகிழ்வாக ...

தொலைவு கண்டிட்ட
மனம் மட்டும் அங்கு
தனிமைப் படும்,
ஏங்கி நிற்கும் - தனிமையால்.
தானே மகிழ்வாக.......
மீண்டும் சேரும் அங்கு.
பாய்கின்ற நீரோடை கலக்கும்.
வாய் மொழி கண்டு
மகிழ்வுறும் - மீண்டும்
ஒரு தென்றல் வீசிடும்.

தானே மகிழ்வாக ...
சொல்லாமல் மனது சிரிக்கும்
அது மகிழ்வுறும் - எல்லாமே மகிழ்வாய்
இருந்திடும் - திருப்திகள்
கொண்டிடும்.
தென்றல் முகர்ந்திடும்.

ஆனாலும் கடையுறு மானிடம்
கருத்து மறந்திடும் எப்போதும்.
மகிழ்வு தேடி கிடைப்பதல்ல.
அது இசைவாய் எம்மிடம் -
தானே மகிழ்வாக...

எழுதியவர் : செல்வி விசாகுலன் (22-Jan-19, 10:58 am)
சேர்த்தது : Chelvi Visakulan
Tanglish : thaane magilvaaga
பார்வை : 74

மேலே