மனிதன்
அண்டை நாகரிகம்
என்னும் மாய
திரை படத்தின்
"கதாநாயகர்களின்
ஒருவன் நான்"
அப்பன் ஆத்தாவை
சுமையென நினைத்து
அண்டை நாகரிகத்துக்கு
பலிகொடுத்த
"மாமனிதர்களின்
ஒருவன் நான்"
உடன் பிறந்தவர்களை
மறந்து மாய கன்னிகளுடன்
பறந்து திரிந்த
"காதல் மன்னர்களுள்
ஒருவன் நான்"
தன்னை தொலைத்துக்கொண்டு
வந்த அப்பாவி அவளை
திருமணம்
என்னும் பெயரில்
என் ஆசைக்கும்
மோகத்துக்கும்
அடிமையாக்கிய
"உத்தமர்களின்
ஒருவன் நான்"
தான் தொடங்கிய
ஆதியில் அவனையும்
கொண்டுவிட்டு
பெருமிதம் கொண்ட
"நல்ல தகப்பன்களில்
ஒருவன் நான்"
என் அப்பன் ஆத்தாவை
தொலைத்த அதே இடத்தில்
இன்று நானும் தொலைந்தேன்..
என அழுது புலம்பும்
" அப்பாவிகளின்
ஒருவன் நான்"
புரிந்து கொண்டேன்....
இறுதியில் பாட்டனாரும்
"சாதாரண மனித ஜென்மம் நான்"
என்பதை.....