சிறை பறவைகள்
நண்பர் முகமது சர்பானின் எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பக்கத்தில் அவர் தூவிய விதையில் பூத்தப் பூக்கள் ...
(நேரிசை ஆசிரியப் பாக்கள்)
உடலினை விருந்தாய் உண்ணும் கழுகிடம்
உடலில் பூத்து உதிர்ந்தப் பூவினை
அன்பாய் வளர்த்த அன்னை
தன்னுயிர் பிரிகையில் தந்துப் போனாளே......
மனையாள் இறந்திட மறுபெண் ஒன்றை
மனைவியாய் ஏற்றவன் மறுமணம் புரிந்தான்...
உத்தம னென்றே மகளிடம்
சித்தியாய் அறிமுகம் செய்துவைத் தானே......
சின்னத் தாயாய் வீட்டினில் நுழைந்தவள்
சின்ன மலரின் புன்னகைப் பறித்து
நித்தமும் செய்யும் கொடுமையில்
சித்திரை நிலவு சிதையுது இங்கே......
புதியக் கருவிலே புதுப்பூ மலர்ந்ததும்
உதிர்ந்தப் பூவினை சுமையெனக் கருதி
வீண்பழி சுமத்தி வீதியில்
அடித்தே சீர்சிருத்தப் பள்ளிச் சேர்த்தாரே......
கல்வியில் சிறந்து நின்ற காளையோ?...
மதுவில் மூழ்கி மாதுவில் மயங்கி
நண்பன் செய்தக் கொலைதனில்
இவன்தலை சிறைப்பள் ளியிலேச் சேர்ந்ததே......
அன்னை தந்தையோ இவன்செய லறிந்து
தூக்கில் தொங்கியே உயிரை இழந்திட
மனந்திருந் தியவன் கண்ணில்
சோகம் நீராய் வழிந்தோ டுதே......
தாயினை இழந்த இரண்டு இதயம்
தாயின் அன்பாய் நெஞ்சம் பகிர்ந்தன...
காலமோ இவளையும் அவனையும்
உணர்வில் ஒன்றெனக் கலந்திடச் செய்ததே......
கண்களில் குளித்த இருவர் உள்ளமும்
காதலின் பறவையில் சிறகாய் இணைந்து
உச்சம் தொட வானில்
மெல்ல மெல்லப் பறந்துச் சென்றதே......
இவர்கள் நற்குணம் கருதியே விடுதலை
ஒரேநாள் இருவரும் வெளியில் வந்தனர்...
வாசலில் இருகைதிப் பறவையைப்
பார்த்ததும் நினைவுகள் மனதை திண்றதே......
வேலைத் தேடி வீதியில் அலைந்தனர்...
சிறையின் வாசனை நுகர்ந்தவ ரென்றே
வேலைத் தந்திட மறுத்து
இங்கே வேலை இல்லையென் றாரே......
இறைவன் கண்களைத் திறந்தான் கையிலே
சிறையில் வேலை செய்தப் பணம்
சிறுதொ ழிலொன்றுத் தொடங்கி
சிறப்பாய் வாழ்ந்திட விளைந்த னரே......