கண்ணெதிரே தோன்றினாள் தொடர் கதை - பகுதி 5 திருத்தம்

கண்ணெதிரே தோன்றினாள் தொடர் கதை - பகுதி 5 திருத்தம்

கிறிஸ்துமஸ் முடிந்து அடுத்த நாள் நித்தியை பார்க்கும் ஆவலில் தன்னேயே மறந்தான் விக்கி.
பாட்டி மா பாட்டிமா.... எங்க போனீங்க ? என்றும் இல்லாமல் கட்டிலில் சாய்ந்திருந்த பாட்டியை பார்த்ததும் ஒரு நிமிடத்தில் விக்கி ஒன்றும் புரியாமல் திகைத்தான். பாட்டி மா என்னாச்சு? பதறிய விக்கியை பாட்டிமா மெதுவாய் தடவினால்
என்னமோ தெரியாது பா எனக்கு காலைல இருந்த கொஞ்சம் உடம்புக்கு முடியாத போல இருக்கு. கஷாயம் குடிச்சான் அதுவும் சரி படர மாதிரி இல்ல.. நீ எங்கயோ கிளம்பின மாறி இருக்கு என்றாள்.
அது இருக்கட்டும் பாட்டிமா வாங்க நாங்க டாக்டர் த போலாம் என்று பாட்டியின் கையை பற்றினான்.
இல்லப்பா டாக்டர் கிட்ட போக தேவல்ல. இன்னும் கொஞ்சத்துல சரியா போகும். நீ போப்பா ஏதாச்சும் முக்கியமான வேலையா இருக்கும். நான் என்ன பார்த்துக்கறேன். இல்ல பாட்டிமா உங்கள இப்படி விட்டுட்டு எண்ணெயால் போக முடியாது உங்களோட இருக்க யாரை சரி வர சொல்லணும். உங்க பிரென்ட் பவனிட சொல்லவா பாட்டிமா?
இல்ல இல்ல தேவால பா இன்னக்கி பவானிக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு நீ போப்பா. என்னெக்கி ஏன் பேத்தியை என் கிட்ட காட்ட போற? நான் கண் மூட முன்ன காட்டிருப்பா !
என்ன பாட்டிமா இப்படி பேசுறீங்க சரி உங்க வரும்கால பேத்தியை இன்னெக்கி காட்றேன் ஓகே வா? ஆனா உங்கள தனியா விட்டுட்டு போக எனக்கு மனசு இல்லையே பாட்டிமா..
ம்ம்ம் நீ காதலிக்குறானு எனக்கு தெரியும்.. ஆனா இன்னெக்கி காட்டுவனு எனக்கு தெரியாதேப்பா.. அது தான் பவானிக்கு முக்கியமான வேலையா?
என்ன பாட்டிமா இதுக்கும் பவானிக்கு என்ன சம்பந்தம் என்னென்னெமோ உளர்ர? உனக்கு இன்னக்கி என்னமோ சரில்ல வா டாக்டர் கிட்ட போய் வரலாம் என்றான்.
இல்ல பா எனக்கு ஒன்னும் இல்ல நீ போய் வா பக்கத்து வீட்டு பார்வதியை கொஞ்சம் வர சொல்லிட்டு போ பா என்றாள்

எழுதியவர் : மாஹிரா (1-Aug-16, 8:24 am)
பார்வை : 149

மேலே