கண்ணெதிரே தோன்றினாள் பகுதி 04

விக்கி நான்கு தடவை நித்தியுடன் பேச முயற்சித்தான் ஆனால் நம்பர் பிஸி என்றே வந்தது. யாரு இவ? எதுக்கு என்ன வெச்சி விளயாடறா? யோசித்து யோசித்தே குழம்பி போனான் விக்கி. இப்படி துடங்கிய விக்கியின் மனப்போராட்டம் கடைசியில் நித்தியுடன் காதலில் முடிந்தது. இதற்கிடையில் எப்பப்பா கல்யாணம் பண்ணிக்க போற என்ற பாட்டிமாவின் நச்சரிப்பு ஒரு பக்கம் முழுப்பெயர் சொந்த இடம் கூறாமல் விழையாடும் நித்தி ஒரு புறம் என விக்னேஷ் நடுவில் மாட்டி கொண்டு விழித்தான். என்ன சொன்னாலும் நித்தியுடன் தொடங்கிய காதல் நாளுக்கு நாள் கூடியதே தவிர குறைந்த பாடில்லை. பெற்றோரின் விபத்துக்கு பின் பாட்டியே உறவான நித்தி பாட்டியிடம் மறைத்த ஒரு விடயம் இந்த காதல் தான். எப்படியாவது நித்தியை பாட்டிக்கு அறிமுகம் படுத்தும் நோக்குடன் நித்தியுடன் கெஞ்சி கொஞ்சி இவர்கள் சந்திக்கும் நாள் குறித்தான் விக்கி.நித்தியிற்கு காதல் பரிசாக இவன் கூரியரில் அனுப்பிய இள நீல நிற கைப்பை தான் இவன் நித்தியை அடையாளம் காண போகும் பொக்கிஷம். நித்தியை பார்க்கும் நாள் வரவே மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதந்தான் விக்கி இனி அவன் வாழ்வே சூனியமாகும் என்பதை உணராமல்.....