கள்ளக் காதல்

கள்ளக் காதல்
ஒருத்தனுக்கு ஒருத்தி
என்றார்கள்
அன்று
ஒருத்தனுக்கு ஒருத்தி
போதாது என்கிறார்கள்
இன்று
நிலம் பார்த்த தலை நிமிராமல்
சென்றார்கள்
அன்று
அடுத்தவள் துணைவனையும்
அளவெடுத்து செல்கிறார்கள்
இன்று
பிள்ளைகள் பிறந்ததும்
மனைவி மேல் காதல் கூடுது
என்றார்கள்
அன்று
பிள்ளைகள் பிறந்ததும்
இன்னொருத்தி மேல் காதல்
வருகிறது என்கிறார்கள்
இன்று
பிள்ளைகளை
தத்தெடுத்துக்கொண்டார்கள்
அன்று
அடுத்தவள் கணவனையும்
தத்தெடுத்து கொள்கிறார்கள்
இன்று
காதல் என்றாலே
தயங்கி நின்றார்கள்
அன்று
கள்ளக் காதலும்
மலிந்து போய்விட்டதே
இன்று.......!!