அவள் ----முஹம்மத் ஸர்பான்

விழிகளால்
மலரை பறித்தேன்
உளியால்
இதயத்தைதகர்த்தாள்
களி செய்த
போன் சித்திரமே...!
கிளி மொழி பேசும்
முத்தினம் அவள்...,

அன்னமும்
பின்னால் வரும்
மான் விழியும்
வேந்தனை வீழ்த்தும்
கன்னத்தில்
விழுகின்ற குழியில்
காலம் கொண்டாடிடும்
கவியும் அவள்.....,

மதியும்
என்னவள் சாயல்..,
யமுனை போல்
ஆடிடும் இடை...,
சுவாசத்தால்
மெல்லிசை தோற்கும்
நதி போல் ஆடும்
கருங்குழல் அவள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (3-Aug-16, 4:53 pm)
பார்வை : 168

மேலே