உலக ஒற்றுமை

எண்களின் ஒற்றுமைதான் கணிதம்
எழுத்தின் ஒற்றுமைதான் கவிதை
அணுக்களின் ஒற்றுமைதான் மூலக்கூறு
ஆறுகளின் ஒற்றுமைதான் பெருங்கடல்
பாறைகளின் ஒற்றுமைதான் பெருமலை
படையின் ஒற்றுமைதான் வெற்றி
நுறைகளின் ஒற்றுமைதான் நீரோட்டம்
மனிதனின் ஒற்றுமைதான் மானுடம்

சமத்துவம் வேண்டும் மனிதா நெஞ்சில்
சாதிமதம் அகற்று மனிதா : என்றும்
நாமென்று சொல்:ஓரினம் தமிழரென்றே
நானிலம் வேல் :முடிவிலா நூல்கள்
தமிழிலே நீதிநூலாம் : நாமிங்கே பிரிவுண்டு
தனித்து நிற்பது சரியா ? பாரதி
கம்பன் வள்ளுவ ரெலாம் பாடிய
கவிநாடு :ஒற்றுமை ஒளிர்தரு நாடே !

எழுதியவர் : பாஸ்கரன் து (3-Aug-16, 5:28 pm)
சேர்த்தது : பாஸ்கரன் து
Tanglish : ulaga otrumai
பார்வை : 203

மேலே