காலை

நாளை சாத்தியத்திமாஎன்று அறியாமல்
களைப்புற்று துயில் கொண்ட நமக்கு
செய்வன அனைத்தும் சிறப்புடன் செய்ய
இறைவன் நன்மைக்கு நல்கிய நல்வாய்ப்பு.

காரிருள் மறைந்து கதிரவன் தலைதூக்க
பட்சிகளும் பறவைகளும் ரீங்காரமிட்டு
தென்றலெனும் தூதனுப்பி மேகத்தை விலக்கி
பகலவனை வரவேற்கும் உன்னத வேளை .

சோம்பல் முறித்து சோகம் கலைத்து
மகிழ்வுடன் துவங்கும் மங்கல வேளை
மனதும் உடலும் நேரமும் கூடி
புதிதாய் கிடைத்த கடவுளின் பரிசு.

எழுதியவர் : (4-Aug-16, 9:00 am)
சேர்த்தது : விஜய் சிவா
Tanglish : kaalai
பார்வை : 253

மேலே