காதல் பட்டாம்பூச்சி
அன்பே!
இன்று கருப்பு சட்டை
ஏன் அணிந்தீர்கள்
என சண்டையிடுகிறாய் ...
உன் கண்
மை
விழிகளுக்கு பொருத்தமாக
அழகென்றேன்...
நீயோ
அப்படியென்றால்
சட்டையை கழட்டிவிடுங்கள்
அதுதான் இன்னும்
அழகென்றாய் ...
கருப்பன் என்கிறாயோ?
செல்லமான சினத்துடன்
நான்...
இந்த சண்டை
அழகை பற்றி அல்லவா?
நிறம் பற்றி இல்லை...
அவளின் அப்பாவியான
விழிகளில் இதழில் ...
காதல் பட்டாம்பூச்சி
கருப்பு நிறமாய் அந்த காலையில்
கவிதை தானே ...