கூந்தல் மல்லிகை பேசினால்
மங்கையின் கூந்தல் மலர்
உயிர்பெற்று பேசினால்
அழகே
காந்தக் காட்டில் என் பிறப்பு
உன் கூந்தல் கட்டிலில்
என் இருப்பு
செடி எனக்கு சுவாசம் தந்தது
உன் முடிதானடி எனக்கு வாசம் தந்தது
உன் குழல்
நான் விடுதலை வேண்டாமல்
குடியிருக்கும் புழல்
குழல் பூக்களைப் பிரிக்கின்றாயே
என் அழுகுரல் உனக்கு கேட்கவில்லையோ
நான் உன் கணவனின் உயிர்
உன் கனவுகளின் பயிர்
உனக்கோ இருட்டுக்கூந்தல்
அதில் நானோ விளக்கேற்றும் ராந்தல்
மலடான நான் அவள்
தலையில் மலரானேன்
நான் அவளிடம் மணத்தை மட்டும்
இழக்கவில்லை என் மனதையும்தான்
என் வாழ்வின் நீளம்
என் மணத்தை மட்டும் பொறுத்ததல்ல
அவள் மனதையும்தான்
நான் அவள் தலையில்
வழியும் மல்லிகை நயாகரா
நான் உதிரும்போது
என்னை சேமித்து நுகருங்கள்
தேவையில்லை வயாகரா

