பாதியில் நின்ற கவிதை

சுழல் காற்றில்
சுற்றித் திரிந்த
வெற்றுக் காகிதமாய்
வாழ்ந்தவனை
கவிதை ஒன்றெழுதி
காப்பாற்றியவள்
இறுதிவரியை
இறுதிவரை எழுதாமலே
இருந்துவிட்டாள்...

கவிதையின் மிச்சத்தை
கற்பனை செய்ய
அவசரமாய் ஒரு
ஆள்தேடுவதா இல்லை
தானாகவே நடக்கும்வரை
தாமதிப்பதா என நான்
கொஞ்சம் நிறையவே
குழம்பி திணறுவதால்

பாதியிலேயே நின்றுவிட்டது

கவிதையும்
கூடவே
என் வாழ்க்கையும்...

எழுதியவர் : சதீஸ்வர் (4-Aug-16, 2:16 am)
பார்வை : 439

மேலே