அழகி

சுருள் கூந்தல் நடுவே சிக்கி தவிக்கும் மலர் வண்டு
கரு விழி ஓரமதில் மிடுக்காய் கரு மச்சம்
கண்ணியவள் நிறமோ கரு மேக நிறம்
காண்பவரின் கண்களுக்கோ கரு சிட்பம்

இடையது சிறியது சுமக்கும் குடமது பெரியது
நடையது நளினம் கம்பனின் கவியது புதினம்
பெண் அவள் விரல்களில் தளர்ந்திதும் வீணை
பெண் குரலதில் ஒளிந்திடும் குயில் நாதம்

பொட்டினுள் புதைந்திடும் விம்பம்
தொட்டதும் மலந்திடும் புஷ்பம்
கேட்டதும் இனித்திடும் சொல்லாச்சி
பெண் அவள் பார்த்ததும் விழியதில் பெண்ணாட்சி

புன்னகை புதிரது விடையில்லா கவியது
தேடும் விழியது தேனின் சுவயது
பெண்ணென பிறந்தது பூவாய் மலந்து
புது வாசம் வீசுது

எழுதியவர் : மாஹிரா (5-Aug-16, 10:14 am)
Tanglish : azhagi
பார்வை : 389

மேலே