விதி மீறலின் விளைவுகள்

பயணிகள் பயணிக்கும் பேருந்தில்
பன்னிரண்டாவது பயிலும் மாணவன்
பத்தாவது பதிலும் மாணவிக்கு
பல சைகைகள் விடுக்க
அதை கண்ட அவளோ
அவள் கூறிய பதிலோ
உன்னை வேண்டுகிறது என்நெஞ்சம்
விதியை தாண்டுகிறது என்மனது
என்னுடன் வந்துவிடு அன்பே
தொடங்கட்டும் நம் சொந்தம்
நமக்கு வேண்டாம் சொந்தபந்தமென
களிப்பில் திளைக்கிற மாணவன்
கையை உயர்த்துகிறான் தலைவாரியோடு
களைப்படைந்த கால்கள் நழுவவே
சக்கரங்களிடையே விழுகிறான் மாணவன்
சக்கையாய் பிழிந்தெடுக்கின்றன சக்கரங்கள்
பிள்ளையை இழந்த தாயாய்
பிடித்து பிடித்து போய்
அவன் அம்மா அழ
ஏதும் அறியாதது போல்
அவள் இறங்கிவிட்டாள் பயணியாய்
இத்துடன் அவன்கதை முடிகிறது
இக்கவிதையுடன் போக்குவரத்து விதிகளை
மீறாதீர் என வலியுறுத்தி

எழுதியவர் : ராகுல் கலையரசன் (5-Aug-16, 10:54 am)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
பார்வை : 67

மேலே