கிள்ளு கீரை

கிள்ளு கீரை என எண்ணுகிறாயா
என்னை...
நான் ஆல மரம்
என் கிளைகளை வேண்டுமானால்
வெட்டி பார்க்கலாம்...
வேரோடு வீழ்த்த
முடியாது...

உன் நேர்மை இல்லாத வெற்றியில்
காணும் உன் சிரிப்பில்
தெரிகிறது உன் ஆணவச் சிரிப்பு
உன் நய வஞ்சக சிரிப்பு
உன் கர்வ சிரிப்பு...
எல்லா சிரிப்பும்
ஒரு நாள் காணாமல்
போகும்...

எழுதியவர் : பவநி (5-Aug-16, 12:25 pm)
பார்வை : 131

மேலே